#DontSkipMorningFood| காலை உணவு மிக மிக முக்கியம்


தினமும் இரவு எட்டு மணி அல்லது பத்து மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்தால் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் கழித்துத்தான் காலையில் எழுகின்றோம். காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிடும் உணவைத்தான் ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் என்று சொல்கின்றனர். அதாவது நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருந்துவிட்டு காலையில் உண்ணும் முதல் உணவு என்பதைத்தான் இது குறிக்கிறது.

எனவே, காலை உணவு என்பது முக்கியமானது, இன்றியமையாதது. நமது உடல் தினமும் புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு இந்த காலை உணவுதான் முதல் ஆதாரமாக இருக்கிறது. காலை உணவாக என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று இப்போது பார்க்கலாம்.

புரதம், கார்போஹைட்ரேட், போன்ற சத்துகள் மிகுந்த பாரம்பர்ய உணவு வகையான இட்லியை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். 

மாவால் செய்யப்பட்ட இன்னொரு உணவு வகையான தோசையும் காலை நேரத்தில் உடல்நலத்துக்கு ஏற்றது. தோசை மாவில் உள்ள உளுந்து பல்வேறு சத்துப் பொருட்களைக் கொண்டுள்ளது. தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுவதால் தேங்காயில் உள்ள  வைட்டமின்கள் நமக்கு கிடைக்கின்றன.

ஆரோக்கிய சுவை செய்திகளை கூகுள் நியூசில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்

கார்போஹைட்ரேட், புரோட்டின் தரும் இன்னொரு வகை உணவு பூரி.  பூரியை மைதாவில் செய்வதற்கு பதில் கோதுமை மாவில் செய்து சாப்பிட்டால் உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். பூரியுடன் உருளைகிழங்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால், அதுவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உருளைக்கிழங்கில் புரோட்டின் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

காலை நேர உணவுகளைப் பெரும்பாலும் நன்றாக வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது. பூரி, தோசை போன்றவற்றில் அதிக எண்ணைய் இல்லாமல் சமைப்பதும், சாப்பிடுவதும் சிறந்த பலனைத் தரும்.

-பா.கனீஸ்வரி

#BreakFirst  #MorningFood #DontSkipMorningFood

சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடர 

ஆரோக்கிய சுவை முகநூல் பக்கம் 

ஆரோக்கிய சுவை டிவிட்டர் பக்கம் 

 


Comments


View More

Leave a Comments