வெண்டைக்காயை புறக்கணிக்காதீர்கள்


வெண்டைக்காயை பார்த்தாலே பலபேருக்கு பிடிக்காது. கிண்டலுக்கு சொல்றமாதிரி அதோட கொழகொழப்புத்தன்மை பிடிக்காது. வெண்டைக்காயோட மகிமை அவங்களுக்கு தெரியாததால இப்பிடி ஒதுக்குறாங்க. பொதுவா வெண்டைக்காயை சாம்பார், கூட்டு பண்ணுவாங்க.

வெண்டைக்காய்க்கு குளிர்ச்சி உண்டாக்குற தன்மை உண்டு. உடல் உஷ்ணம் உள்ளவங்க வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். வாரத்துல மூணுநாள் வெண்டைக்காயை சமைச்சி சாப்பிட்டு வந்தா மூளைக்கு பலம் கிடைக்குமாம்.

வெண்டைக்காய் பிஞ்சா இருந்தாலும் சரி, முத்தின காயா இருந்தாலும் சரி அதை சூப் வச்சி குடிச்சா இருமல் குணமாகும். முக்கியமா முத்தின வெண்டை சூப் ரொம்ப நல்லது. எப்பிடி செய்யணும்னு கேக்கிறீங்களா? வெண்டைக்காய் ரெண்டோ,மூணோ எடுத்துக்கோங்க. துண்டு துண்டா நறுக்கி எடுத்து அதோட ஒரு தக்காளி (நறுக்கியது), ரெண்டு மூணு பூண்டுப்பல், சின்ன வெங்காயம் ரெண்டு, அஞ்சாறு மிளகு, கால் ஸ்பூன் சீரகம் எல்லாத்தையும் ஒண்ணா போட்டு ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைங்க. பாதியா வத்தினதும் கொஞ்சம் உப்பு போட்டு இறக்கி மத்தால ஒரு கடை கடைஞ்சு சூட்டோட குடிங்க. இருமல் வந்த வழியை பார்த்து போயிரும். நேத்து சாய்ங்காலம் வீட்டுக்கு போனதும் வெண்டைக்காய் சூப் தான்.


வெண்டைக்காயை பால்ல சேர்த்து வேக வச்சி குடிக்கலாம். மத்தபடி பிஞ்சு வெண்டைக்காயை வேக வச்சி எடுத்த தண்ணியோட சர்க்கரை சேர்த்து குடிச்சா இருமல், நீர்க்கடுப்பு, பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் சரியாகும்.

நன்றி; திரு. Maria Bellsin  முகநூல் பதிவு 

 


Comments


View More

Leave a Comments