#OrganicAgriFoodMarket வேளாண் உணவு சந்தையில் கிடைக்கும் பொருட்கள் விவரம்..
இயற்கை வழி விவசாயம் செய்யும் உழவர்கள் தங்கள் பொருட்களை தமிழ்நாட்டின் பல இடங்களில் சந்தைப்படுத்தி வருகின்றனர். அது பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து இங்கே வழங்குகின்றோம். பொருட்களின் விலை, கிடைக்கும் அளவு போன்றவை அந்தந்த அமைப்புகளின் பொறுப்பை சார்ந்தது.
தருமபுரியில் நாளை தமிழர் மரபுச் சந்தை
வாரம்தோறும் நடைபெறும் தமிழர் மரபுச் சந்தை இந்த முறையும் அதே இடத்தில் அதாவது, காவேரி பழத் தோட்டம், பாரதிபுரம், மதுராபாய் திருமண மண்டபம் எதிரில், சேலம் பிரதான சாலை, தருமபுரி - 636701 என்ற முகவரியில் நாளை செயல்படுகிறது.
26ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சந்தையில் கீழ் கண்ட பொருட்கள் கிடைக்கும். இந்த வாரம் சந்தையில் புதிதாக காட்டுயாணம் எள்ளு முறுக்கு கிடைக்கும். இந்த வாரம் முதல் தமிழர் மரபு சந்தையில் இந்தாண்டுக்கான மரபு வகை விதை நெல் வகைகள் விவசாயிகளுக்கு பகிரப்படும்.
கருங்குறுவை 120 நாட்கள்.
குள்ளக்கார் 100 நாள்.
பிசினி 120 நாள்.
பூங்கார் 100 நாள்.
சிகப்பு கவுனி 140 நாள்.
அறுபதாம் குறுவை 90 நாள்.
Must Read: #AgriEventsCalendar சென்னையில் வரும் 26ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி…
தூயமல்லி 135 நாள்.
திருநெல்வேலி கிச்சடி சம்பா 135 நாள்.
சீரக சம்பா 130 நாள்.
பொஃரு 110 நாள்.
மைசூர் மல்லி 120 நாள்.
காட்டுயானம் 180 நாள்.
நவரா 100 நாள்.
கருப்பு கவுனி 150 நாள்.
இலுப்பை பூ சம்பா 140 நாள்.
செம்புளி 140 நாள்.
இரசகடம் 140 நாள்.
ஆகிய பாரம்பர்ய ரகங்களின் விதை நெல் கிடைக்கும். செ.அமர்நாத், +918682094659 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் இப்போது விதை நெல் வாங்குவோர், தாங்கள் விளைவித்து அறுவடை செய்த பின்னர் பிறருக்கும் பரவலாக்கம் செய்யும் வகையில் கட்டாயம் நெல் திருப்பி தர வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் சில முக்கியமான பொருட்கள்
ஏற்காடு மிளகு 1 kg - ரூ. 600
வத்தல் மலை மிளகு 1 kg - ரூ 600
கருப்பு கவுனி 1 kg - ரூ 110
( அதிகபட்சம் 5 கிலோ மட்டுமே கிடைக்கும்)
கருப்பு கவுனி புழுங்கல் 1 kg - ரூ 130
நாட்டு மாட்டு பால் 1 lt - ரூ 80 ( சனிக்கிழமை இரவுக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும்)
பனை வெல்லம் 1 kg- ரூ. 170
அறஞ்சான் கருவாடு
மூக்கு கருவாடு
குச்சி கருவாடு
வெள்ளை நெத்திலி கருவாடு
சிகப்பு நெத்திலி கருவாடு
கொல்லி கருவாடு
பேத்தை கருவாடு
பால் சுறா கருவாடு
இறால் (prawn) கருவாடு
பால் நெத்திலி கருவாடு
கறி கருவாடு
சென்னா குன்னி குஞ்சி கருவாடு
வெள்ளாட்டு இறைச்சி மற்றும் சீரக சம்பா அரிசியில் செய்த பிரியாணி ஒன்று மட்டும் ரூ. 200. பிரியாணி காலை 10.30 மணிக்கு மேல் கிடைக்கும்
உலர் நெல்லி மிட்டாய் விற்பனை
காட்டு நெல்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருந்தும் அதில் புளிப்பு மற்றும் உவர்ப்பு தன்மை இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக சாப்பிடுவதில்லை. அதனால் அவர்கள் தினசரி உட்கொண்டு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உருவாக்கப்பட்டது தான் நெல்லி மிட்டாய். ஒரு கிலோ - ₹450/-க்கும், அரைகிலோ -₹230க்கும் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் இலவச கொரியர் செலவில் அனுப்பி வைக்கப்படும்.
நெல்லி மிட்டாய்க்கு பணம் செலுத்துவோர் கூகுள் பே மூலம் செலுத்தலாம். அதற்கான மொபைல் எண் 8903558991.
Must Read: #TrendingHealthstory கொரோனா காலத்தில் இந்தியர்கள் எந்த உணவுக்கு அதிகம் செலவிட்டார்கள் தெரியுமா?
இது தவிர வங்கி கணக்கிலும் பணம் செலுத்தலாம் அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Name- V. Venkadesh
Acc. No: 67378195763
Isfc no: SBIN0070209
Bank name- SBI bank
Kalakad branch
நெல்லிக்காயின் பயன்கள்:
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். இதனால் சாக்லேட், எண்ணெயில் செய்த தூரித உணவுகளை (அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை) தவிர்ப்பதால் அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.
கண்களுக்கு குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். வாந்தி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். இருமல் மற்றும் சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும். முடி உதிர்தலும் தடுக்கப்படும்.
மேலும் தகவலுக்கு; அமிர்தம் இயற்கை அங்காடி, களக்காடு, திருநெல்வேலி மாவட்டம் 8903558991 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
##OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai
Comments