தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்


/body>

இயற்கை வேளாண் மற்றும் மரபு நிகழ்வுகள் 

தமிழர் மரபு நிகழ்வுகள் குறித்த தகவல்கள் 

இயற்கை வேளாண் முன்னெடுப்புகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

⚪             பௌர்ணமி குடும்ப கூடல் திருவிழா 

இனி வரும் ஒவ்வொரு பௌர்ணமி இரவும்  ஐயா நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமானோர் வானகத்தில் ஒன்று கூடி நிலாச்சோறுடன்  இசை , நாடகம் ,  மரபு விளையாட்டு , மரபு வேளாண் வரலாறு , கதையாடல் என நண்பர்கள் கூடி உரையாடுவோம்  .

துவக்க விழாவாக 20-09-2021 திங்கள் இரவு 6.00 மணி முதல்  

பெருங்கதையாடலாக "மரபு குடிகளின் வேளாண் வரலாறு" குறித்த கதையாடலை பகிர்ந்து " *எழுத்தாளர் சோ.தர்மன்* " அவர்கள் நிகழ்வை துவக்கி வைக்கிறார் .

Also Read: வெளியானது கபசுரகுடிநீரின் இரண்டு ஆய்வுகள்…

முழு நிலவொளியில் கூடி இசை ,  நாடகம் ,  மரபு விளையாட்டுகள் ,  கதையாடல் , வேளாண் வரலாறு என உரையாடி விளையாடி நிலவொளியில் நினைவோம் .

குடும்பங்களோடு விருப்ப உணவெடுத்து  வாருங்கள் நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து உண்போம். படர்ந்து உரையாடுவோம்.முன் பதிவிற்கு  : 9445879292

                   ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கல்

 

தமிழ்நாட்டில் பனை விதைகள் நடவு என்பது எம்ஜிஆர் ஆட்சியிலேயே தொடங்கியது. கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் பனை வாரியம் தலைவராக இருந்த குமரி அனந்தன் முனைப்பு காட்டினார்.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே இயற்கை ஆர்வலர்களும், அது சார்ந்த பல்வேறு குழுக்களை சேர்ந்தோரும் பனை மரங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சம் பனை விதைகளை திரு. மு.அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

 ஆனால் பனை மரங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் குறைந்தே தவிர கூடவில்லை. இப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர்  அப்பாவு தொடங்கியிருக்கிறார்.

Also Read: நொறுங்கத் தின்போம்

சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையின் போது உறுதியளித்தபடி ஒரு லட்சம் பனை விதைகளை திரு. மு.அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

தேனிபனைநடவு2021 முதல் களபணி

ஆணி பிடுங்கும் திருவிழா, தேனி மாவட்ட தன்னார்வலர்கள் நடத்தும் மூன்றாம் ஆண்டு தேனி பனை நடவு 2021 நிகழ்வின் மூன்றாம் களபணி டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் அண்மையில் போடி பரமசிவன் கோவில் கூவலிங்கம் ஆறு செல்லும் வழியில் நடவு செய்யபட்டது, 

களபணியை R.சத்தியமூர்த்தி B.A.BL.தொடங்கி வைத்தார்., களபணி ஒருங்கிணைப்பு செய்த நல்லாசிரியர் விருது பெற்ற .அ.சின்னராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது, களபணியில் அருகில் இருந்த பனை மரங்களில் இருந்து 550 பனை விதைகள் சேகரிக்கபட்டன,

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments