சூடான உணவால் உங்கள் வாய் வெந்துபோனால் என்ன செய்ய வேண்டும்?
அதிக சூடாக ஏதாவது சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த உடனேயே வாய் எரியும் உணர்வு ஏற்படுதுவது வழக்கம். எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை அறியாமல் ஒரு பானத்தைப் பருகும்போதோ அல்லது உணவை மெல்லும்போதோ அதன் சூடு காரணமாக நம் வாய் வெந்து போவதுண்டு. அதிக சூடான தேநீர் அல்லது ஓவனில் இருந்து எடுக்கப்பட்ட உடனே சூடாக சாப்பிடும் பீட்சா காரணமாக கூட அவ்வாறு வாய் வெந்து போக வாய்ப்புள்ளது.
அதீத சூடான உணவை அதன் சூடு அறியாமல் உண்ணும்போது சில நொடிகளில், நம் நாக்கு அல்லது வாயின் உட்பகுதி வெந்து போகக் கூடும். இவ்வாறு வாய் வெந்து போவதால் நாக்கானது உணவை ருசிக்கும் திறனையும் இழக்க நேரிடும். வாய் வெந்து போன காயத்தின் வலியைக் குறைக்க உதவும் உடனடி தீர்வுகளை நாம் தேடுகிறோம். கீழ்குறிப்பிட்ட ஐந்து வழிகளில் உங்கள் வாய் எரிச்சலை தணிக்க முடியும்.
1. ஐஸ் கட்டிகள்
குளிர்ந்த நீர் குடிப்பது வாயில் எரிச்சலை குறைக்கும் என்பதே எப்போதுமே நம் மனதில் தோன்றும் முதல் தீர்வாக இருக்கிறது. எனவே எரிச்சல் உணர்வைக் குறைக்க ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் வாயில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து, அது முழுமையாக உருகும் வரை அதை சப்பிக் கொண்டிருக்கலாம். இது எரிச்சலை குறைத்து மரத்து போகச்செய்து உங்களுக்கு உரிய தீர்வைத் தரும்.
Must Read: சென்னை உணவு வரலாற்றில் தடம் பதித்த வடகறி, சிக்கன் 65…
2. குளிர்ந்த பால்
சூடான உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்க குளிர்ந்த பால் நல்ல மீட்பாக இருக்கும். வாய் வெந்துபோவது போன்ற தருணங்களில் நீங்கள் நிச்சயமாக ஒரு கிளாஸ் குளிர்ந்த பாலை குடிக்கலாம். பால் வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
3. உப்பு நீர்
உப்பு ஒரு பயனுள்ள கிருமி நாசினி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். பொதுவாக காயங்களுக்கு சிகிச்சையளிக்க உப்பு பயன்படுகிறது. சூடான பானங்கள் அல்லது உணவு காரணமாக நம் வெந்து போயிருப்பதன் காரணமாக நேரிடும் வலி மற்றும் சங்கடத்தை உப்பு குறைக்க உதவும். ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் சிறிது உப்பு சேர்த்து உங்கள் வாயில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கொப்பளிக்கவும்.
.4. தேன்
தேன் தடவுவது வாயில் எரிந்த காயத்தை குணப்படுத்தும் மற்றொரு சிறந்த வழியாகும். தேனில் உள்ள பாக்டீரியா புண் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தீக்காயங்களிலிருந்து விரைவாக நம்மை மீட்க உதவுகிறது. இது ஒரு இனிமையான விளைவையும் ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிது தேனை தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். சிறிது நேரம் கழித்து வாயை தண்ணீரால் முழுமையாக கொப்பளிக்கவும்.
5. கற்றாழை
கற்றாழையில் உள்ள ஜெல் குளிர்ச்சியான உணர்வைக் கொண்டுள்ளது. இது வாய் எரிச்சலால் நேரிட்ட அசௌகரியத்தை குறைக்க உதவும். கற்றாழை ஜெல் கசக்கும் ஆனால், வாய் வெந்த நிலையில் அதில் இருந்து நிவாரணம் தேவை என்றால், கற்றாழை ஜெல்லை சிறிது தடவி சில நிமிடங்கள் வைத்திருந்து வாயை கழுவிவிடவும்.
-ரமணி
#mouthburn #cureformouthburn #homeremedies
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments