கையால் சாப்பிடுவது கெட்ட பழக்கமா?


இந்திய உணவு பாரம்பர்யத்தில் சாப்பிடுவதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. கையால் சாப்பிடுவது என்பது இந்தியாவின் முதன்மையான உணவு உண்ணும் பழக்கங்களில் ஒன்றாகும். கைகளை நன்றாக் கழுவி விட்டு, கைகளால் உணவை எடுத்து சாப்பிடுவது நல்லது என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். 

கைகளில் உணவை பிசைந்து சாப்பிடுவது அல்லது தொட்டு எடுத்து சாப்பிடுவது உணவுக்கும் நமக்குமான ஒரு உறவை வலுப்படுத்துகிறது. உணவின் ருசியை அறிந்தும் சாப்பிட முடிகிறது. உணவு வீணாகாமல் சாப்பிட முடிகிறது. 

ஸ்பூனில் சாப்பிடும்போது உணவு சிந்துவது வழக்கம். இதன் வாயிலாக உணவு வீணாகிறது. ஸ்பூனில் உணவு உண்ணும் பழக்கம் என்பது மேற்கத்திய பழக்கமாகும். ஸ்பூனில் சாப்பிடுவது சுகாதாரம் என்று வலியுறுத்தப்படுகிறது. 

இதையும் படியுங்கள்; கேரள ஸ்டைல் முருங்கை கீரை முட்டை பொடிமாஸ்

ஆனால், நமது முன்னோர்கள் காடுமேடு என்று உழைக்கும் வர்க்கத்தினர் தூக்குவாளியில் கொண்டு சென்ற சோற்றை , கைகளை கழுவி விட்டு கைகளால் அள்ளி சாப்பிடுவதைத்தான் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரியாணி அரிசி விளம்பரத்தில் கூட இது இந்தியாவின் பழைய பழக்கம் என்று சொல்லப்படுகிறது. இப்படி சாப்பிடும் முறையை பிறருக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

இந்த வீடியோவில் பெண் ஒருவர் சாப்பிடும்போது ஒருவர் வீடியோ எடுக்கிறார். அனேகமாக இது ஒரு திருமண நிகழ்வாக இருக்கலாம். வீடியோ எடுப்பதை பார்த்த பெண், அதுவரை கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை விட்டு விட்டு, ஸ்பூனால் சாப்பிட ஆரம்பிக்கிறார். அந்த பெண்ணின் கனநேரத்தில் மாறும் செயலைக்கொண்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

யூடியூப் வீடியோ லிங்கை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்;  https://www.youtube.com/watch?v=D8AB8SQ35is

-ஆகேறன் 

 

#ViralVideo #EatingViralVideo 


Comments


View More

Leave a Comments