தொலைத்த ஆரோக்கியத்தை உணவு முறையில் மீட்டெடுக்க உதவும் புத்தகம்….
உணவு முறை பற்றி தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், காணொளிகள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் பல்வேறு விஷயங்களை நான் பேசி வருவது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் ஒரு பகுதியாக ஆனந்த விகடன் பத்திரிக்கையில் கடந்த ஒரு வருடமாக "ஆரோக்கியம் ஒரு பிளேட்" எனும் பெயரில், உணவு பற்றிய தொடர் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதன் முதல் முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு "ஆரோக்கியம் ஒரு பிளேட்" என்னும் புத்தகமாக தற்பொழுது வெளியாகி உள்ளது.உணவு பற்றி பல்வேறு தளங்களில் நான் பேசிய பல்வேறு விஷயங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக இந்த புத்தகம் இருக்கும்.
Must Read: சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா; அசத்தும் சுவையில் பாரம்பர்ய உணவுகள்…
உணவின் அறிவியல் தொடங்கி அரசியல் வரை அனைத்து விஷயங்களும், எளிய மொழியில் சாமானியனுக்கும் புரியும் வகையில், இதில் பேசப்பட்டுள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் உணவு பற்றிய உங்கள் புரிதலை தலைகீழாக மாற்றிப் போடும் என்பதில் ஐயமில்லை.
தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத இரத்த கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவிற்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
எங்கோ தொலைத்த உங்கள் ஆரோக்கியத்தை, உணவு முறை மூலம் மீட்டெடுக்க இந்த புத்தகம் உங்களுக்கு கட்டாயம் உதவும் என்று நம்புகிறேன்.ஆன்லைன் மூலம் புத்தகம் வாங்குவதற்கான லிங்க்: https://books.vikatan.com/book-details?bid=2580
அமேசான் தளத்திலும் விரைவில் புத்தகம் விற்பனைக்கு வர உள்ளது. தற்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சியில் விகடன் ஸ்டால்கள் எண் F-1 மற்றும் F-44 இல் இந்த புத்தகம் விற்பனையில் உள்ளது.விரைவில் அனைத்து ஊர்களில் உள்ள முக்கிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கட்டாயம் பகிரவும்.
-மருத்துவர் அருண்குமார், குழந்தை நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர்,ஈரோடு.
#BooksAboutHealthyFoods #HealthyFoods #DRArunkumar
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்
Comments