உலக ரோஜா தினத்தில் புற்றுநோயாளிகளின் நலனுக்காக சிந்திக்கலாம்…


ஆண்டு தோறும் செப்டம்பர் 22ம் தேதியை உலக ரோஜா தினம் என்ற பெயரில் புற்றுநோயாளிகளின் நலனுக்கான தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய்க்கு எதிராக சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை போராடி வருகின்றனர். புற்றுநோயோடு போராடி தினம் தினம் செத்துப் பிழைக்கும் நோயாளிகளின் கவலைகளைப் போக்கி ஊக்கம் அளித்து ஆதரவு அளிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். 
 
 
புற்று  நோயாளிகளின் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதையும், உறுதி மற்றும் நேர்மறையின் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போரில் அவர்கள் வெற்றிபெற முடியும் என்பதையும் அவர்களுக்கு இந்த நாள்  நினைவூட்டுகிறது.
 
உலக ரோஜா தினம் 2022: முக்கியத்துவம்
 
உலக ரோஜா தினமான இன்று புற்றுநோய் எனும் கடினமான பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நோயாளிகள், அவர்களை அன்புடனும், ஆதரவுடனும் பராமரிப்பாளர்களுக்கு ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்துவதும் ரோஜா தினத்தின் முக்கியத்துவமாகும். 
 
ரோஸ் தினத்தில் புற்றுநோயாளிகள் பற்றி சிந்திக்கலாம்
புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது உடல் ரீதியானது மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  மேலும் உலக ரோஜா தினம் போன்ற நிகழ்வுகள் புற்றுநோயாளிகளிடம் உள் வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன.  1996ம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த  12 வயதான நோயாளி மெலிண்டா ரோஸின் நினைவாகவே உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் ரோஸுக்கு அஸ்கின் ட்யூமர் இருப்பது கண்டறியப்பட்டது, ரத்த புற்றுநோயில் ஏற்படும் அரிதான வகையாக இந்த புற்று நோய் குறிப்பிடப்படுகிறது. 
 
 
சில வாரங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தாலும், அதையெல்லாம் விஞ்சி, மெலிண்டா ரோஸ் மூன்று வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்தார். மருத்துவர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து, அவள் இன்னும் ஆறு வாரங்கள் மட்டுமே வாழ்வாள் என்று கூறினர்.  ஆனால் அதை நினைத்து அவர் துக்கப்படவில்லை. 
 
பதிலாக அவர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களை முழு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அனுபவிக்க முடிவு செய்தார், மேலும் அவர் ஆறு மாதங்கள் வரை வாழ்ந்தார். இதன் பின்னர்  உலகத்தை கண்ணீரில் ஆழ்த்தி விட்டு இறந்து விட்டார். 
 
#WorldRoseDay2022 #September22WorldRoseDay   #WorldRoseDay #MelindaRose

Comments


View More

Leave a Comments