காய்ச்சலிலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்ன தெரியுமா?


கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான  அளவு நீரை எடுக்க வேண்டும். 

தேவையான அளவு நீர் என்றால் எவ்வளவு? 

ஒரு நோயாளி தனது சிறுநீரின் தன்மையை கவனித்து வர வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழித்தாக வேண்டும். சிறுநீரின் அளவை தோராயமாகவாவது அளக்க வேண்டும். 

Must Read: தூத்துக்குடி ஓலை புட்டு உணவகம்… இலங்கை தமிழ் அகதிகள் நடத்தும் பாரம்பர்ய உணவகம்

குழந்தைகளாக இருப்பின் சிறுநீரை பேனில் பிடித்து அளக்கலாம்.சராசரி  சிறுநீர் வெளியேறும் அளவு என்பது 1-2 மில்லி லிட்டர் / கிலோ கிராம் உடல் எடை / மணிநேரம்  அதாவது , 20 கிலோ எடை இருக்கும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 40 மில்லி சிறுநீர் கழிக்க வேண்டும்.ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை 120 முதல் 240 மில்லி கழித்தாலும் சரியே.24மணிநேரம் கணக்கிடுகையில் 480 முதல் 960 மில்லி கழித்திருக்க  வேண்டும்

எது அபாயகட்டம் ?

0.5 மில்லி சிறுநீர் / கிலோகிராம் உடல் எடை/ மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாக சிறுநீர் கழித்தால் ஆபத்தான கட்டம் என்று பொருள். உதாரணமாக ஒரு 20 கிலோ எடை உள்ள குழந்தை , ஆறு மணிநேரமாக சிறுநீரே கழிக்காமல் இருந்தாலோ , வெறும் 60 மில்லி அல்லது அதற்கும் குறைவாக கழித்தால் ஆபத்து என அறிக. 

காய்ச்சலுக்கு ஏற்ற உணவுகள்

அடுத்து சிறுநீரின் நிறம் - இளமஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அடற் மஞ்சள் நிறத்தில் சென்றாலோ  சிவப்பு நிறத்தில் சென்றாலோ ஆபத்தென அறிக. ஒருவருக்கு காய்ச்சல் அடித்தால் அவரை பட்டினியாய் போடுவது தவறு. அவரது உடலுக்கு தேவையான சக்தியை நீர் மற்றும் நீராகாரங்கள் வழி வழங்க வேண்டும். ஓ.ஆர் எஸ் எனும் உயிர் காக்கும் அமுதத்தை வர லிட்டர் நன்னீரில் கலந்து அதை குடிக்க கொடுக்க வேண்டும். இளநீர்,  மோர் போன்றவற்றை கொடுக்கலாம்

Must Read:#Shorts நேந்திரம் வாழைபழத்தில் உள்ள நன்மைகள் என்ன?

சாதமாக இல்லாமல் கஞ்சியாக வடித்து மூன்று வேளையும் கொடுக்கலாம். வாய்வழியாக உணவு எடுக்க இயலா நிலைவரின், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து நாளம் வழியே திரவங்கள் ஏற்றப்படும். நீர்ச்சத்து நம்மை காக்கும் . அதை சரியாக பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு. டெங்கி குறிவைப்பது நமது நீர்சத்தை தான். ஆகவே கவனம் இருந்தால் பல உயிர்கள் காக்கப்படும் 

சிறப்பு பின்குறிப்பு 

குறைமாவு உணவு முறையில் இருக்கும் சொந்தங்கள் பேலியோ உணவு முறையில் இருந்து Diet Holiday எடுத்துக் கொள்ளலாம்.  காய்ச்சல் குணமான  பின்பு மீண்டும் குறை மாவு  உணவு முறைக்குத்  திரும்ப முடியும்.  கஞ்சி / இட்லி/ இடியாப்பம்  / பால்/ இளநீர்  / Oral rehydration salt கரைசல்  போன்றவற்றை எடுக்கலாம். 

இது ஒரு எச்சரிக்கை பதிவு மட்டுமே. காய்ச்சல் இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அல்லது உரிய மருத்துவரிடம் ஆலோசனைபெற வேண்டியது முக்கியம்.

-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,பொது நல மருத்துவர்,சிவகங்கை

#FoodForFever  #WhatFoodTakeWhenFever  #Hydrate your body


Comments


View More

Leave a Comments