பள்ளி மாணவர்களுக்கு வாழை இலையில் மதிய உணவு


 

புதுச்சேரி; புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாழை இலையில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

வில்லியனூர் கொம்யூன், கீழ்சாத்தமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக வாழை இலையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது. பள்ளியில் மதிய உணவு உண்ணுவதற்காக வீட்டில் இருந்து தட்டு எடுத்து வந்தே மாணவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

இந்தநிலையில்தான் இந்த அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு வாழை இலையில் உணவு அளிக்கும் திட்டத்தைத் தொடங்கினர். பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சியை புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். இப்போது வாழை இலைகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. விரைவிலேயே பள்ளி வளாகத்தில் வாழை கன்றுகளை நட்டு வளர்க்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வாழை இலையில் உணவு அருந்துவது சுத்தம், சுகாதாரம் மட்டுமின்றி, சூழலுக்கும் ஏற்ற நடவடிக்கையாகும். இது போன்ற முயற்சியை இதர பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Comments


View More

Leave a Comments