பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பான பானங்கள் இதயத்துக்கு ஆபத்தானவை..
ஹார்வர்டு பல்கலைக்கழகம் அண்மையில் 2,10,000 பேரை மாதிரி சோதனைக்கு உட்படுத்தி இந்த அதர்ச்சி தரும் ஆய்வு முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை உண்பதின் வாயிலாக பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது இதய நோய், பக்கவாதம் அல்லது நீரழிவு நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
2,10,000 பேர் 32 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டங்களில் இவர்களிடம் இதயநோய் அறிகுறி ஏதும் இல்லை.
எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இனிப்பான பானங்கள் அதாவது பழரசங்கள் உள்ளிட்டவற்றையும் தவிர்ப்பது நல்லது என்கிறது இந்த ஆய்வு. அதற்கு பதில் பழங்களை அப்படியே உண்ணுவது நல்லது. அழற்சி எதிர்ப்பு உணவுகள் உண்ணலாம்.
ஹார்வர்டு மருத்துவ ஆய்வு அறிக்கையானது, பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட, உணவுகளுக்குப் பதில் பச்சை காய்கறிகள், ஆரஞ்சு காய்கறிகள், காரட், முழு தாணியங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2,10,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் உணவு உண்ணும் முறை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 32 ஆண்டுகள் வரை பதிவு செய்யப்பட்டது. அதிக அழற்சி கொண்ட உணவுகளை அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பான பானங்கள் ஆகியவற்றை சாப்பிட்டவர்களில் 38 சதவிகிதம் பேருக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அவர்களில் 28 சதவிகிதம் பேருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்புகளும் இருந்தன.
#ProcessedFoods #SweetDrinksAreDangerous #HeartAffectFoods #TamilFoodNews
Comments