ரயிலில் உணவு ஆர்டர் செய்ய ரயில்ரெஸ்ட்ரோ மொபைல் செயலி...
ரயில் பயணத்தின் போது நல்ல, தரமான, சுவையான உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். ஆனால், பல நேரங்களில் ரயில் பயணத்தின்போது உணவு உண்பது என்பது ஒரு கொடூரமான அனுபவம் ஆகி விடும்.
ரயில் பயணத்தின்போது தரமான உணவு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. ஆம். ரயில் ரெஸ்ட்ரோ மொபைல் செயலி வாயிலாக சுடசுட உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடலாம். இந்த செயலி வாயிலாக இதுவரை 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 60 உணவுகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக இந்த ரயில் ரெஸ்ட்ரோ மொபைல் செயலி சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்போது மீண்டும் இ-கேட்டரிங் சேவைகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ரயிலில் தொடங்கி இருக்கின்றன. இதையடுத்து இப்போது மீண்டும் ரயில் ரெஸ்ட்ரோ மொபைல் செயலி சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மொபைல் செயலி வழியே தென்னிந்திய உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள், ராஜஸ்தான் உணவு வகைகள் என்று உங்களுக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்யலாம். பேக்கரி வகை உணவுகளையும் விநியோகிக்க இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல ரயிலில் குழந்தைகளுக்கான உணவுகள்கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது. சூடான பால், கிச்சடி, பழக்கலவை ஆகியவையும் விநியோகிக்கப்படும். சீன உணவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு வகை உணவுகளும் விநியோகிக்கப்படும். ரயில் பயணத்தின் போது சிக்னல் கிடைக்காத இடங்களில் ஆப்லைனிலும் இதில் உணவை முன்பதிவு செய்ய முடியும். இதில் உணவு முன்பதிவு செய்வது மட்டுமின்றி டிக்கெட்டின் பிஎன்ஆர் நிலவரம் குறித்தும் இதில் உள்ள வசதி மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு
. -பா.கனீஸ்வரி
#RailRestro #MobileApp #ForOrderingFoodOnRailRestro #TamilFoodNews
Comments