கொரோனா எதிரொலி; உணவு தேடலை சுலபமாக்கும் கூகுள் தேடல் பொறி


 

 கொரோனா தொற்று பரவல் காரணமாக , முடங்கி இருக்கும் இந்திய நகரங்களில் எங்கு உணவு கிடைக்கும், இரவு தங்கும் இடம் கிடைக்கும் என்ற தகவல்களை எளிதாக அறிய மத்திய‍ அரசுடன் இணைந்து கூகுள் நிறுவனம் தகவல்களை வெளியிடுகிறது.

பொது உணவு வழங்கும் இடங்கள், பொது தங்கும் இடங்கள் குறித்து கூகுள் மேப்களில் அல்லது ஸ்மார்ட்போன் மேப்களில் தேடமுடியும். கூகுள் மேம்பில் Food shelters and city name. என்பதை தேர்வு செய்து எங்கெங்கு இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதைப் போலவே ஏதும் அற்ற ஏழைகளுக்கு இரவில் தங்கும் வசதி எங்கு அளிக்கப்படுகிறது என்பதையும் இதில் தேட முடியும். முகவரியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது முதலில் இது ஆங்கில மொழியில் மட்டும் தரப்படுகிறது. விரைவில் மாநில மொழிகளில் இந்த வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏழைகள் எப்படி இவ்வாறு தேடமுடியும். அவர்களிடம் மொபைல் போன் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போலவே தம் தெருவில் இருக்கும் ஏழைகளுக்கு இந்த உதவியையாவது நாம் அளிக்கலாம். உணவு தர நமக்கு வசதி இல்லாவிட்டாலும் இதுபோன்ற தகவல் உதவியையாவது அவர்களுக்கு அளிக்கலாமே.


Comments


View More

Leave a Comments