அந்தியூரில் பெண்களுக்கான இரண்டு நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி


செஞ்சோலை அமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில்  பெண்களுக்கான இயற்கைவாழ்வியல் மருத்துவ பயிற்சி முகாம் வரும்  28 & 29(சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

கோவை திரு.ஹீலர்.பாஸ்கர் ஐயா குழுவை சேர்ந்த இயற்கைநல மருத்துவர்.திருமதி.அகிலா அவர்கள் இந்த பயிற்சியை வழங்குகிறார். பயிற்சியில்  இயற்கை மருத்துவத்தின் அடிப்படைகள், நலம் தரும் உணவு முறைகள், யோகாசன பயிற்சி , மூச்சுப் பயிற்சி & தியானப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

Must Read: தொலைத்த ஆரோக்கியத்தை உணவு முறையில் மீட்டெடுக்க உதவும் புத்தகம்….

மேலும், குளியல்முறைகள் (எண்ணெய் குளியல், வாழை இலைக் குளியல், மண் குளியல், இடுப்பு குளியல், முதுகுதண்டு குளியல், பாத குளியல்),  உடல்கழிவுநீக்க_பயிற்சிகள், கண் கழுவுதல், மூக்கு கழுவுதல், எண்ணெய் கொப்பளித்தல், கர்ப்பவாய் சுத்தி, இனிமா ஆகியவை குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 

பெண்களுக்கான இரண்டு நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி

 

குழந்தை குளிக்க வைக்கும் முறை, உரை மருந்து கொடுக்கும் முறை, பெண் குழந்தைகளின் பருவ கால சிக்கல்களும் தீர்வுகளும் ,எளிமையாக நோய் குணப்படுத்தும் முறைகள் பழ உணவுகள் மூலம் உடல்நலம் பேணுதல் உள்ளிட்ட பல இயற்கை மருத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் எளிமையான முறையில் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 

இயற்கை சூழலில் வாழ்ந்து கற்றுக் கொள்வோம் விரும்பும்  20 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு. எனவே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்ய சு.அருள்ஒளி 9361 42 7747,  த.மயில்சாமி 9944 019149  ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். 

பயிற்சியானது 28/01 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு துவங்கி 29/01 ஞாயிறு மாலை 04.30 மணிக்கு  நிறைவடையும். செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணை, நஞ்சமடைக் குட்டை, அந்தியூர், ஈரோடு மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நிகழ்விடத்துக்கான கூகுள் வரைபட வழிகாட்டி; https://goo.gl/maps/YqKF9YxX5WP6tWvw5

#NaturalLifeTraining #HealthyLifeTeaching #HowToLifeWithNature

 
 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Comments


View More

Leave a Comments