ஊட்டச்சத்து வாரத்தில் சத்தான உணவு எது என்று தெரிந்து கொள்ளுங்கள்...


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொண்டால்தான் உடல் வலிமையாக இருக்கும், உடல் வலிமை பெற்றால்தான் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். 
ஊட்டச்சத்து என்பது என்ன என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டாலும் மாவு, புரதம், கொழுப்பு ஆகிய மூன்று சத்துகளும் சம அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உணவு ஊட்டச்சத்து உணவு என்று சொல்ல முடியும். 
நாம் உண்ணும் உணவில் அயோடின், கால்சியம், இரும்புச் சத்துகளும், உயிர்ச்சத்து எனப்படும் வைட்டமின் சத்துகளும் சம அளவில் இடம்பெற வேண்டியது அவசியம் அப்போதுதான் அந்த உணவு நமக்குத் தேவையான முழுமையான சமச்சீரான ஊட்டச்சத்தை நமது உடலுக்குத் தரும். 
சரிசமமான முறையில் ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளாவிட்டால், ரத்தசோகை, தைராய்டு பிரச்னைகள், போன்ற குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உடல் குறைபாடு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். வளரும் பருவத்தில் ஊட்டத்துக்குறைவு ஏற்பட்டால், குழந்தைகளின் வளர்ச்சியில், எடையில் பாதிப்புகள் ஏற்படும். இதனால், உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுள்ளவர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. 

Comments


View More

Leave a Comments