பற்கள், ஈறுகள் வலிமையாக இருக்க மீன் உணவுகள் உண்ணலாம்..
நமது உடலில் ஆற்றல் நிலைத்திருக்க உணவு முக்கியம். உணவை மென்று நம் வயிற்றுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது பற்கள்தான். பற்கள் ஆரோகியமாக இல்லை எனில் அது பல்வேறு நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம்.
எனவே பற்கள் ஆரோக்கியம் என்பது எப்போதும் முக்கியமாகும். நமது தோற்றத்திலும் பற்களுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. நாம் பேசும்போதும், சிரிக்கும்போது பற்கள்தான் நம்முடைய சந்தோஷத்தை,உரையாடலை நீடித்திருக்கச் செய்கின்றன. பற்கள் ஆரோக்கியமற்று இருந்தால், நம்மிடம் உரையாடுவதற்கே பலர் தயங்குவர்.
Must Read: ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
பற்கள் ஆரோக்கியமாக இருக்க நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும். நாவிற்கு சுவையான உணவுகள் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு கெடுதல் செய்பவையாக இருக்கும். பற்கள் எப்போதும் வலிமையாக இருக்க சர்க்கரை சத்து குறைவான உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.
சாக்லேட் என்பது அனைவருக்கும் பிடித்தமானது. ஆனால், சர்க்கரை சேர்க்காத சாக்லேட்களை உண்ண வேண்டியது அவசியம். எனவே, சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் கொக்கோ வகை சாக்லேட்கள் அல்லது டார்க் சாக்லேட்களை உண்ணலாம்.
பற்களுக்கு தேவையானது வைட்டமின் டி சத்து ஆகும். மீன்களில் அதிக அளவு வைட்டமின் டி உள்ளது. இது பற்களுக்குத் தேவையான கால்சியத்தைக் கொடுக்கிறது. இதனால், பற்கள் அழுகுவதுகுறையும். வெண்ணை போன்ற பொருட்களில் வைட்டமின் கே2 அதிகம் இருக்கிறது ஆரோக்கியமான பற்களுக்கு இவை அவசியத் தேவையாகும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊட்டசத்து குறைவான பொருட்களை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
பா.கனீஸ்வரி
#DietForDental #FoodForDental #DentalHealth
Comments