ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்


சர்க்கரை நோயாளிகள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சில உணவுகளை உண்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

கடல் உணவுகள்

மீன்களில் புரோட்டின், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் சத்துகள், தாதுப்பொருட்கள் , நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சத்துகள் நிறைய உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் புரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. 

Must Read: திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் வெற்றிக்கதை

உணவுக்குப் பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் புரோட்டின் செயல்புரிகிறது. எனவே மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும்.

பூசணி மற்றும் பூசணி விதைகள்

பூசணியில் நார் சத்து நிறைய உள்ளது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களுக்கு மிகவும் ஏற்ற உணவு பூசணி. மெக்சிக்கோ, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாரம்பர்ய உணவு முறையில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பூசணி உபயோகிக்கப்படுகிறது. 

பூசணி விதைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்   

பூசணியை உணவாக சாப்பிடுவதைத் தவிர, பூசணி சாறு, பூசணி பொடி ஆகிவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். அதே போல பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரோட்டின்கள் உள்ளன.

கொட்டைகள்

வேர்கடலை, மற்றும் பாதம் பருப்புகள் போன்ற கொட்டை வகைகளை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். குறிப்பாக உணவுக்கு முன்னும், பின்னும் கூட இந்த பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். தினமும் மூன்று பாதாம் பருப்பு எடுத்துக் கொண்டால் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வெண்டை

வெண்டைகாயில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைகும் பொருட்கள் நிறைந்துள்ளது.வெண்டையில் பாலிசாக்கரைட்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டு ஆண்டிஆக்சிடெண்ட்கள் உள்ளன. 

Must Read:உலக ரோஜா தினத்தில் புற்றுநோயாளிகளின் நலனுக்காக சிந்திக்கலாம்…

துருக்கி நாட்டில் பல ஆண்டுகளாக வெண்டைக்காய் விதைகள் சர்க்கரை நோயாளிகளுக்கான இயற்கை மருத்துப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது.

ஆரஞ்சு பழ வகைகள்

சிட்ரஸ் பழவகைகள் எனப்படும் ஆரஞ்சு பழ வகைகள் இனிப்பாக இருக்கும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் ஆரஞ்சு பழவகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. நார்சதுகளும் ஆரஞ்சு பழங்களில் நிறைய உள்ளன.

-பா.கனீஸ்வரி 

#FoodsForSugarControl   #FoodForBloodSugarControl  #FoodForDiabetes  #FoodDiet


Comments


View More

Leave a Comments