அதிக இறைச்சியை உட்கொள்வது புற்றுநோய்க்கான ஆபத்தா?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, புற்றுநோயை அதிகரிப்பதில் அசைவ உணவுகள் முக்கிய பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்று மீண்டும் விவாதத்தைத்தையும் கிளப்பியுள்ளது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேன்சர் ரிசர்ச் இணைந்து நிதியளித்த இந்த ஆய்வு பெரிய அளவில் நடைபெற்றது. மீன் உட்பட இறைச்சியை உண்பதை விடவும் சைவ உணவு சாப்பிடுவது புற்று நோய் அபாயம் மிக மிக க் குறைவு என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
ஆக்ஸ்போர்டு அடிப்படையிலான குழு 2006 மற்றும் 2010 க்கு இடையில் இங்கிலாந்து பயோ பேங்கில் இருந்து சேகரிக்கப்பட்ட 4,72,000 க்கும் மேற்பட்ட 18 வயதுக்கு அதிகமான பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தது.
இதன் மூலம் உணவு மற்றும் புற்றுநோய் அபாயத்திற்கு இடையிலான தொடர்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. .
குழு 1: வழக்கமான இறைச்சி உண்பவர்கள் (வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் இறைச்சி உண்பவர்கள்)
குழு 2: குறைந்த அளவு இறைச்சி நுகர்வோர் (வாரத்திற்கு ஐந்து முறை அல்லது குறைவாக இறைச்சி சாப்பிடுபவர்கள்)
குழு 3: மீன் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பவர்கள்
குழு 4: சைவ உணவு உண்பவர்கள் (இறைச்சி அல்லாத உணவுகள்)
ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களிடம் இருந்து சராசரியாக 11.4 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 54,961 நிகழ்வுகளில் புற்றுநோய்கள் சாத்தியத்துக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன.
இதில் 5882 பேருக்கு பெருங்குடல் புற்று நோய், 7537 பேருக்கு மார்பக புற்றுநோய் 9501 பேருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இறைச்சி உண்பவர்களுக்கான அபாயங்கள்
இறைச்சி உண்பவர்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த அளவு இறைச்சி உண்பவர், மீன் உண்பவர் அல்லது சைவ உணவு உண்பவர் என அனைத்து தரப்பினருமே புற்றுநோய்க்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். குறைந்த அளவு இறைச்சி உண்பவராக இருப்பது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைவாக உள்ளது.
Must Read: தோல்நோய்களை குணப்படுத்தும் கருடக்கொடி…
சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, அதே நேரத்தில் அவர்கள் அதிக எடையுடன் உடல் பரும்னாக இருந்தால், சைவ உணவு உண்பவர்களாக இருந்தபோதிலும் புற்றுநோயின் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாகிறது.
ஆண்களில், மீன் உண்பவர் அல்லது சைவ உணவு உண்பவராக இருப்பது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கு குறைந்த அபாயமே உள்ளது. புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்ற காரணிகளால் அவர்களுக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்
ஆய்வு முடிவுகளின்படி குறிப்பிட்ட உணவுப் பழக்கம், அதாவது இறைச்சி உண்பதை குறைத்துக் கொள்வது அல்லது சைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்தல் ஆகியவை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
Must Read: இயற்கையாவே கொழுப்பை குறைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
சிவப்பு நிற மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது, பிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நோயற்ற வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் இது அதிகரிக்கிறது என சுகாதார நிபுணர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
உலகிலேயே இந்தியர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகளுக்கான அபாயம் மிகக் குறைவாக உள்ளது என்பதை மேற்கத்திய நாடுகள் ஆராய்ந்து, அது நம் முன்னோர்கள் பரிந்துரைத்த நமது உணவு பழக்கம்தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
"இந்தியாவில் புற்றுநோய் விகிதம் ஏன் மிகவும் குறைவாக உள்ளது?" என்ற தலைப்பில் டாக்டர் மைக்கேல் ஹெர்ஷல் கிரெகர் எழுதிய கட்டுரையில் " உணவில் பரவலாக மஞ்சள் உட்கொள்ளப்படும் மேற்கத்திய பகுதிகளில் பொதுவான சில புற்றுநோய்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-ரமணி
#MeatFoods #MeatFoodsUnsafe #NonvegFoodsUnsafe #CancerLinkedToMeatFoods
#AvoidMeatFoods
Comments