மயில்களும், முறையீடுமாக வேளாண் பொழுதுகள்; பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவு
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஒரு மருத்துவர் மட்டுமின்றி, இயற்கையை நேசிக்கும் ஒரு பசுமை காவலரும் கூட. அவரது மருமகள் பசுமை தாயகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
திண்டிவனம் நகரில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பசுமை சூழ டாக்டர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தனது தோட்டத்தில் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை விளைவித்துக் கொள்கின்றனர்.
முகநூல் சமூகதளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் டாக்டர் ராமதாஸ் ஒரு பதிவில் தன் தோட்டத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதனை இங்கே படிக்கலாம்.
Must Read: இயற்கை வளங்களை பாதுகாக்கும் கல்விமுறை தேவை; உழவர் திருநாளின் சிந்தனை
தைலாபுரம் தோட்டத்தில் எங்களின் உணவுத் தேவைக்காக பொன்னி நெல் பயிரிட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்போது அந்த பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகி விட்டன. இதை அறிந்ததும் எங்கள் நிலத்திற்கு மயிலார்கள் படையெடுத்திருக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட மயிலார்கள் அவர்களின் குழந்தைகளுடன் வயலுக்கு வந்து நெல்லை அறுவடை செய்து சாப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதை பார்த்து விட்டு திரும்பும் எனது மனைவி சரஸ்வதி அம்மையார், நமக்கு முன்பே நெல்லை மயிலார்கள் அறுவடை செய்து சாப்பிடுவதாக என்னிடம் முறையீடு செய்வார்கள். அதைக் கேட்ட நானும், நமது மயிலார்கள் தானே.... அவை சாப்பிட்டு விட்டு போகட்டும் என்று அவரை ஆற்றுப்படுத்துவேன். இப்படி மயில்களும், முறையீடுமாக எங்கள் வேளாண் பொழுதுகள் கழிகின்றன.
நன்றி; Dr.Ramadoss முகநூல் பதிவு
#PMKFounderDR.Ramadoss #DRRamadoss #PasumaiThayagam
ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்
Comments