ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும் ரோஜா குல்கந்து


 

எந்த ஒரு இயற்கை பொருளையும் உகந்த வகையில் தயாரித்து உண்ணும்போதுதான் அதன் பலன்கள் கிடைக்கும்.   ரோஜா குல்கந்து என்ற பெயரில் பலர் ரோஜா குல்கந்து கல்கண்டு சேர்த்து செய்யப்பட்டதால் அதில் இனிப்பு சுவையே அதிகமிருக்கும் ஆனால் நாம் செய்யும் குல்கந்து பன்னீர் ரோஜாவின் துவர்ப்பு சுவையுடன் அப்படியே இருக்கும், ஏனெனில் நாம் ரோஜாவுடன் தேன் சேர்த்து double boiler முறையில்   3 மணி நேரம் வரை நன்றாக process செய்து குல்கந்து தயாரிக்கிறோம்,

 எவ்வாறு பயன்படுத்துவது?

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம் பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவும், சிறியவர்களுக்கு 1 டீஸ்பூன் அளவும் கொடுக்க வேண்டும். மேலும் தினமும் வெறும் வயிற்றில் இதை எடுத்துகொள்ளலாம். 

Must Read: உடலுக்கு குளிர்ச்சி தரும் உலக்கை பாலை மூலிகை…

வளரும் பிள்ளைகளுக்கு பாலை நன்றாக ஆற வைத்து குல்கந்து கலந்து மில்க் ஷேக் போன்று கொடுக்கலாம். வெற்றிலையின் உள்ளே வைத்தும் பீடாவில் சேர்த்து சாப்பிடலாம்

குல்கந்தின் பயன்கள்

1.  குல்கந்து துவர்ப்பு சுவை கொண்டுள்ளதால் ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் இவை செயல்படுகிறது

2.  ரோஜா குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்யும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் பசியை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.

ரோஜா குல்கந்து எனும் அற்புத மருந்து

 

3.  உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன. இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட. ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணமாக இருக்கிறது. குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது

4. பித்தம் அதிகமாகும் போது கிறுகிறுப்பு, வாந்தி, குமட்டல் உணர்வு போன்றவை உண்டாக கூடும், அந்த நேரத்தில் குளிர்ந்த தண்ணீரில் கலந்து  குடிக்கலாம்,இதன் மூலம் பித்தம்  குறையும்

5.  இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் இது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் சரும பளபளப்பை அதிகரிக்கும்

6. இது உஷ்ணத்தை குறைப்பதால் பருக்கள் நீக்குகிறது. சருமத்தை தெளிவாக வைத்திருக்க செய்கிறது. தினசரி 1 டீஸ்பூன் குல்கந்தின் வழக்கமான நுகர்வு பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் தசைகளை தளர்த்த உதவும். மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகள் குறைக்க செய்யும். இது அதிகப்படியான வெள்ளைப்போக்கு சிகிச்சைக்கு உதவுகிறது

குல்கந்த பாதிப்பில்லாதது. பக்கவிளைவுகள் இல்லாதது ஆகினும் அளவுடன் எடுத்து கொள்வதே உடலுக்கு நன்மை பயக்கும். ரோஜா குல்கந்து தேவைப்படுவோர் 9578899664 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தகவல், படம்; VP Honey

#RojaGulkand   #RojaGulkandBenefits  #HealthyRojaGulkand 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

 


Comments


View More

Leave a Comments