அரசின் சித்த மருத்துவ சேவையில் தானா சேர்ந்த இளம் மருத்துவர்கள்…


யார் இந்த  இளைஞர்கள்? என பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து சித்த மருத்துவ சிகிச்சைக்கு கைகொடுத்து வருகின்றனர். 

நோயைக் கண்டு உலகமே பயந்து நடுங்கும் சூழலில், எதை பற்றியும் கவலைப்படாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவத்திற்காக படித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் சித்த மருத்துவ சகோதர சகோதரிகள் உதவி வருகின்றனர். 

சென்ற வருடம் மாவட்ட ஆட்சியர் பேசும் போது, 'இந்த சினிமால வர்ற மாதிரி சித்த மருத்துவ இளைஞர்கள ஒண்ணு சேத்து ஏன் சித்த மருத்துவத்த பரப்ப முயற்சிக்க கூடாது...' தீர்க்க தரிசி போல அவர் அன்று கூறிய வார்த்தைகள் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உண்மையில் நிறைவேறிவிட்டது.

இதையும் படியுங்கள்; இயற்கையாவே கொழுப்பை குறைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

ஆம். சித்த மருத்துவத்தின் மீது பற்று கொண்டு 'தானா சேர்ந்த கூட்டம்' இவர்கள்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சித்த மருத்துவத்திற்காக களம் இறங்கி இருக்கும் இந்த இளைஞர் பட்டாளம் எதிர் காலத்தில் சித்த மருத்துவத்திற்காக பல சாதனைகள் புரியும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்கு சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில்  இந்த இளைஞர்களின் துடிப்பும் சித்த மருத்துவ கரிசனமும் தான் நோயாளிகளை மகிழ்வித்து வருகிறது...

தன்னலம் பாரா உழைப்பு... சித்த மருத்துவ வேட்கை... நிச்சயம் அடுத்தக் கட்டத்திற்கு இவர்களை இட்டுச் செல்லும். திருப்பத்தூர் மட்டுமன்றி பல பகுதிகளில் இருந்து வந்து சேவை செய்யும் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்...

இந்த இளம் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களை ஊக்கப்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடுத்த பரிசு அவர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி... இவர்களின் சித்த மருத்துவ பங்களிப்பிற்கு நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன...

இந்தப் பெருமை மிகு சித்த மருத்துவ இளைஞர்களின் பெயர்கள் உங்கள் மனதில் இடம் பிடிக்கட்டும்... மரு.தமிழ் செல்வன், மரு.தீபா, மரு.இளவரசி, மரு.அம்பேத்கர், மரு.செல்வ பாண்டியன், மரு.தினேஷ்... மாணவிகள் செல்வி. கோடீஸ்வரி, செல்வி.கணிஷா, செல்வி.தமிழ்அரசி, செல்வி.ஷிவானி, செல்வி திவ்ய ஶ்ரீ ஆகியோர்தான் இந்த பெருமைக்கு உரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

-மரு.வி.விக்ரம்குமார்

#CoronavirusSiddhaMedicine  #SiddhaMaruthuvam #SiddhaStudents  #ThirupathurSiddhhaTreatment

 

 


Comments


View More

Leave a Comments