முடி உதிர்வதை தடுக்க வேண்டுமெனில் இந்த 5 உணவுகளை உட்கொள்ளாதீர்கள்
முடிதானே என்று நாம் அலட்சியம் செய்வதில்லை. முடியின் மீது நாம் காட்டும் அதீத அக்கறையின் காரணமாகத்தான் முடி உதிர்வை அடிப்படையாகக் கொண்ட வணிக விளம்பரங்கள் கோடிகளை குவிக்கின்றன. முடியை வலுப்படுத்தும் விளம்பரங்களும் அதற்கு இணையாக உலகம் முழுவதும் வணிக வாய்ப்புகளை வாரிக்குவிக்கின்றன. முடி ஆரோக்கியமாக வளர சில உணவுகளை தவிர்த்தாலே போதுமானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஆம். நாம் குறிப்பிடும் இந்த உணவுகளை நீங்கள் தவிர்த்தாலே முடி ஆரோக்கியமாக வளரும்.
சர்க்கரை
சர்க்கரை முடிக்கு மிகவும் எதிரியான உணவு. இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தும் சர்க்கரை, நீரழிவுக்கும், உடல் பருமன் ஆவதற்கும் வழி வகுக்கும். அதோடு உங்கள் முடியை உதிர்க்கவும் செய்யும். இதைப் பொருட்படுத்தாமல் அதிக சர்க்கரை உண்டால் உங்கள் தலை வழுக்கையாகி விடும். எனவே முடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் சர்க்கரையை தவிர்த்து விடுங்கள்.
உயர் கிளைசெமிக் உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட மாவு, பிரட் உள்ளிட்டவை அதிக கிளைசெமிக் கொண்டிருக்கின்றன. இவற்றை உண்ணும்போது உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலை இன்மை ஏற்படுகிறது. ஆண்களிடம் உள்ள ஆன்ட்ரோஜன் எனப்படும் முடியின் வேரை பலப்படுத்தும் ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
மதுபானங்கள்
நமது முடியானது புரோட்டினால் உருவாகிறது. கெராட்டின் என்று அழைக்கப்படும் புரோட்டின்தான் உங்கள் முடிக்கான கட்டமைப்பை கொடுக்கிறது. மது குடிப்பவர்களுக்கு புரோட்டினில் பாதிப்பு ஏற்படும். எனவே முடி வலுவிழந்துவிடும். அதிக அளவு மது குடிப்பதால், நமது உடலுக்குத் தேவையான நுண்ணூட்ட சத்தில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதன்காரணமாக முடியின் வேர்கள் இறந்து விடும். அதிக அளவுக்கு முடி உதிரும். எனவே மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
ஜங்க் ஃபுட்
எண்ணையில் பொறித்த உணவுகள் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் ஒற்றை நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை உங்கள் உடல் பருமனை அதிகரிப்பதுடன், இதய நோய்களுக்கும் வழிவகுக்கும். உங்கள் முடியின் உதிர்வையும் அதிகரிக்கும்.
டயட் சோடா
டயட் சோடாவில் அஸ்பார்டேம் என்று அழைக்கப்படும் செயற்கையான இனிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.இது முடியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முடியின் வேரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. முடி உதிரும் பிரச்னை உள்ளவர்கள் டயட் சோடாவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
-பா.கனீஸ்வரி
#DoNotTakeJunkFoods #5FoodsToAvoid #AvoidFoodForHairLoss
Comments