கண் பாதுகாப்புக்கு ஏற்ற நான்கு முக்கிய உணவுகள் என்னவென்று தெரியுமா?


இப்போதைய டிஜிட்டல் உலகில் பிறந்த குழந்தை கூட ஸ்மார்ட்போன் திரையைப் பார்த்து சிரிக்கிறது. அதிக ஒளி கொண்ட திரை சிறிய குழந்தைகளை ஈர்க்கின்றது. இந்த அதிக ஒளியை அதிக முறை கண்களால் பார்க்கும்போது கண்களின் வலிமை திறன் சீக்கிரமே குன்றி விடுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே மிக சிறிய வயதில் கண்ணாடி அணியும் பழக்கம் பலரிடம் வந்து விட்டது. அதே நேரத்தில் 70 வயதைக் கடந்தவர்கள் கூட கண்ணாடி அணியாமல் நாளிதழ்கள்படிப்பதும், அளவோடு தொலைகாட்சிகள் உள்ளிட்டவைகளை பார்த்தும் பொழுது போக்குகின்றனர். இதனால் கண்களும் ஆரோக்கியமாக இருக்கின்றன.

கண்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் உணவுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஸ்மார்ட் போன், டேப்லெட், டிவி என்று விதம் விதமான ஒளி சிந்தும் திரைகளை பார்ப்பதால் நம் கண்கள் இப்போது சீக்கிரம் களைத்து விடுகிறது. கண்களை பாதுகாக்க கீழ் கண்ட உணவுகளை அவசியம் நீங்கள் உண்ண வேண்டும்.

கேரட்

கேரட் சாப்பிடுவது மொத்த உடலுக்கும் நல்லது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதனால் கண்களுக்கு என்ன நன்மை தெரியுமா? கேரட்டில் அதிக அளவு இருப்பது பீட்டா கரோட்டின் என்ற பொருள். இதை உண்ணும்போது கல்லீரலில் வைட்டமின் ஏ ஆக மாறி நம் கண்களைப் பாதுகாக்கிறது. எனவே கேரட் சாப்பிடுவதை தவற விடவேண்டாம்.

முட்டை

கேரட்டைப் போலவே முட்டையும் உடல்நலத்துக்கு நல்லதுதான். குறிப்பாக கண்களுக்கு மிகவும் நல்லது. முட்டையை வேக வைத்து உண்ணும்போது, அதில் உள்ள வைட்டமின் பி12 சத்தானது நம் உடல் மந்த நிலையைப் போக்குகிறது. கண்களுக்கு முக்கியமான தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி சத்துகளும் முட்டையில் உள்ளன. இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகளும் முட்டைகளில் உள்ளன.

பாதாம்

தினமும் ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடாலே உடலுக்கு ஆரோக்கியம்தான். அதிலும் பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி இரும்பு சத்து, புரதம் ஆகியவை உள்ளன. வைட்டமின் இ சத்தும் நிறைய உள்ளது. இதனால், கண்களில் கேட்ராக்ட் எனும் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும்.

கீரைகள்

அனைத்து வகை கீரைகளும் கண்களுக்கு நல்லதுதான். பார்வை குறைபாடு உடையவர்கள் தினம் தோறும் கீரை சாப்பிடுவது நல்லது. கண்விழித்திரையை பாதுகாக்கும் சத்துகளும் கீரையில் நிரம்ப உள்ளன. அதிக பிரகாசம் கொண்ட வெண் திரைகளை பார்க்கும் நாம் அடிக்கடி கீரை எடுத்துக் கொள்வதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நலன்பெற முடியும்.

 

#FourFoodForEye  #FoodForEyeHealth #FoodForEye #கண்களுக்குஏற்றஉணவு  #கண்ஆரோக்கியத்துக்கானஉணவு


Comments


View More

Leave a Comments