‘நாம் சாப்பிடும் முறை சரியா…’ தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தை படியுங்கள்…


நம்முடைய தமிழர் பண்பாட்டில் கையால் உணவை சாப்பிடுவது, இலையில் சாப்பிடுவது, தரையில் சம்மணம் போட்டு உணவு உண்பது என்பதற்கான பல செயல்பாடுகள் நமது உடல் நலனை காப்பதற்காக நம்முனோர்களால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளாகும். 

அதே போல காலை, மதியம், இரவு என என்ன உணவுகளை உண்ணலாம் என்பதையும் நமது முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை பீதிக்கு உள்ளாக்கும் கொரோனா தாக்கம் இப்போது புதிய வடிவில் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

Must Read: #Shorts தோல் அரிப்பை தடுக்கும் சீமை அகத்தி

இந்த ஒரு சூழ்நிலையில் சித்தமருத்துவரும், எழுத்தாளருமான திரு.விக்ரம் குமார் எழுதிய ‘நாம் சாப்பிடும் முறை சரியா…’ என்ற தலைப்பில் ஒரு குறுநூல் வெளியாகி உள்ளது. 

நாம் சாப்பிடும் முறை சரியா

இந்த காலகட்டத்துக்கு ஏற்ற சிறந்த நூலாக பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.  மூன்று வேளை உணவுகள் சார்ந்த நெறிமுறைகள்… உணவியல் குறிப்புகள்… சாப்பிட வேண்டிய உணவுகள்… சித்த மருத்துவ உணவியல் போன்ற விஷயங்கள் குறித்து இந்த நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. 

புத்தகத்தினை காக்கைக் கூடு பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத்தின் விலை 25 ரூபாய் மட்டுமே.  புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் 9043605144 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இதுவாகும். 

#மரு.வி.விக்ரம்குமாரின் எழுத்தும் உணர்வும் #நலக்கண்ணாடி #Nala Kannaadi  #HowToEats  #FoodGuide

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments