ஊரெங்கும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது ஏன்?. பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கேள்வி
மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு. மரியபெல்சின் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக பங்களிப்பை செய்து வருகின்றார்.
Must Read: ‘நாம் சாப்பிடும் முறை சரியா…’ தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தை படியுங்கள்…
மரியபெல்சின் அவர்கள் அறம் இணைய இதழில் எழுதிய கட்டுரைகளை பாரம்பரிய இயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை காக்கைக்கூடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதே போல மேலும் பல அரிய தகவல்களை வைத்தியம் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை உணவு உலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்தியாலயா வளாகத்தில் நடைபெற்றது.
சன்நியூஸ் நெறியாளர் ராஜா திருவேங்கடம், அறம் இணைய இதழின் ஆசிரியர் திரு. சாவித்திரி கண்ணன், வளர்தொழில் ஆசிரியர் திரு.க.ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், “இன்றைக்கு ஆங்கில மருத்துவம் எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. மருத்துவமனைக்குள் சென்றால், நம்மை ஒரு நோயில் இருந்து மீள விடாமல், பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் மருந்துகளை அளித்து, பல நோய்களை ஏற்படுத்துகின்றனர்.
மூலிகைகள் வாயிலான இயற்கை மருத்துவம் பக்கவிளைவுகள் இன்றி நம்மை குணப்படுத்துகின்றது. அப்படி அரிய தகவல்களைகொண்ட புத்தகங்களை எழுதியிருக்கும் நல்ல மனிதர் மரியபெல்சினை இந்த சமூகம் பாதுகாக்க வேண்டும்.
Must Read: #Shorts தோல் அரிப்பை தடுக்கும் சீமை அகத்தி
இன்றைக்கு நாடெங்கும் , நகர்கள் தோறும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. ஒரு காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இன்றைக்கு பொறியியல் கல்லூரிகள் பல மூடப்பட்டுள்ளன. எனவே இவ்வளவு அதிகமாக மருத்துவக்கல்லூரிகள் தேவையற்றது,” என்று குறிப்பிட்டார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உணவு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களை வாங்குவதற்கு திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#MariyaBelsin #SavithiriKannan #BooksAboutHearbal #BookAboutPattiVaithiyam
Comments