காளானை இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?


காளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதச்சத்து. இறைச்சி மற்றும் முட்டையில் புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. ஆனால் அவை ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலைச் சேமித்து, அபாயத்தை ஏற்படுத்திவிடும். 

மாறாக, காளானில் கொழுப்புச்சத்து இல்லாததால், அந்தப் பிரச்னை எதுவும் இல்லை. ஆகவேதான் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி போன்றவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

Must Read: கண்ணதாசன் மெஸ்சின் வெற்றியின் ரகசியம் சொல்லும் கவிஞரின் மகள் கலைச்செல்வி

குழந்தைகள் மற்றும் முதியோருக்கான உணவுகள் எளிதில் செரிமானமாக வேண்டும். அதனால் காளான் உணவை தாராளமாக அவர்களுக்கு உண்ணக் கொடுக்கலாம். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடும். இதில், இரும்புச்சத்தும் வைட்டமின்களும் உள்ளன. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்களும் உள்ளன. ஆக, பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்துகிறது காளான்.

நன்மை தரும் காளான்

 

ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும், ரத்த நாளங்களின் உள்பரப்பில் கொழுப்பு அடைக்காமலும் இது தடுக்கிறது. இதில் தாமிரச் சத்து இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீர்செய்யும்.

காளானை சூப் செய்து குடித்துவந்தால், காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகும். இந்த நோய்களைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்துகளும்கூட காளானிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சூப்பை அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, புற்றுநோய் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை இது பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குழந்தையின்மைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் கர்ப்பப்பை நோய் உள்ள பெண்களுக்கும் இது நல்ல தீர்வைத் தரக்கூடியது.

வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் வரக்கூடிய புண்களைக் குணப்படுத்தும். மூட்டு வாதம் உள்ளவர்களுக்கும் அருமையான மருந்து. இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காளானை வெறுமனே சமைத்துச் சாப்பிடாமல், முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் செய்து சாப்பிடலாம். பிரியாணி செய்தால் முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் காளான் சேர்த்துச் சாப்பிடலாம். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்களும் உடல் இளைத்தவர்களும் தினமும் காளான் சூப் அருந்திவந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Must Read: #ShortVideo முருங்கை விதையின் பலன்கள்

இது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு உடம்பில் வலி, வீக்கம் வராமல் தடுக்கும். மூளையின் நினைவாற்றலை ஒழுங்குபடுத்தும். தசைநார்களின் இயக்கத்தைச் சீராக்கும். வயது முதிர்ச்சியடையாமல் காக்கும். மரபணுக்களின் தன்மையைக் காத்து பாரம்பர்ய நோய்களைத் தடுக்கும். இத்தனை நலன்களை அள்ளித்தரும் காளானை பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது.

காளான் பற்றி இத்தனை சிறப்பாகச் சொன்னாலும் கடைகளில் இப்போது கிடைப்பவற்றில் பல பதப்படுத்தப்படுத்திய நிலையில் கிடைக்கின்றன. மொட்டுக்காளானைவிட சிப்பிக்காளான் சாப்பிட சுவையாகவும். இருக்கும். 

- எம்.மரிய பெல்சின், 9551486617

#Mushroom  #MushroomBenefits  #HealthyMushroom 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments