புரட்டாசி சனிக்கிழமை விரதம் தொடங்கியது….
புரட்டாசி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை கடந்து விட்டது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது பல நன்மைகளைத் தரும் என்று ஆன்மீகப்பெரியோர் கூறுகின்றனர்.
முதலாவது சனிக்கிழமை
முதலாவது சனிக்கிழமையன்று திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு கால பூஜை முடிவடைந்ததும் சாமிக்கு படைக்கப்பட்ட நைவேத்யங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டன.
பக்தர்களில் பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் விரத த்தை கடைபிடிக்கின்றனர். இது தவிர புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் விரதம் இருப்பது சிறந்தது.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை அன்று வீட்டில் மதியம் தலைவாழை இலையில் சாமிக்கு விருந்து படைக்க வேண்டும். இதை தலுகை போடுதல் என்று சொல்வார்கள். விருந்து படைப்பதற்காக சிலர் யாசகமாக பணம் பெற்று, அந்த அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜைசெய்வர்
வீட்டில் சாமிக்கு விருந்து படைத்து வழிபாடு
இதன் பின்னர் அந்த அரிசியில் சாமிக்கு படைக்க நைவேத்திய உணவுகளை சமைக்க வேண்டும். சமைத்த புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் ஆகியவற்றை தலைவாழை இலையில் போட்டு சாமிக்கு படைக்க வேண்டும். இதன் பின்னர் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் உணவை உண்டு விரதம் முடிக்க வேண்டும். சனிக்கிழமை விரதம் முடிந்து உண்ணும்போது அண்டைவீட்டாரை அழைத்து அவர்களுக்கும் விருந்து படைக்கலாம்.
-பா.கனீஸ்வரி
#PuratasiSaniViratham #PuratasiSani #PuratasiFast #PuratasPerumalTemple
Comments