தேனில் கலப்படம் செய்த நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத்துறைக்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தல்


தேன் என்பது இயற்கையின் அற்புதமான கொடையில் ஒன்று. இனிப்பு சுவையுடன் ஏராளமான சத்துகளையும் தேன் கொண்டுள்ளது. தேன் உடல் வலிமையைக் கொடுக்கும். கண்பார்வை, இதயநோய்கள் குணம் அடையவும் தேன் உதவும். ஜீரணசக்திக்கும் தேன் உதவுகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் உணவு ஆராய்ச்சியாளர்கள் 13 முன்னணி பிராண்ட் தேன் மற்றும் பிராண்ட் அல்லாத  தேன் வகைகளை ஆய்வு செய்த து. ஆய்வின் முடிவில் மாதிரிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தேன் வகைகளில் 77 சதவிகிதம் கலப்படம் என்று தெரியவந்தது. அதாவது தேனில் சர்க்கரைக் கரைசல் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 22 மாதிரிகளில் 5 மாதிரிகள் மட்டுமே தரமானவை என்று தெரியவந்தது.  

டாபர், பதஞ்சலி, ஜண்டு, ஹிட்காரி, அபிஸ் ஹிமாலயா ஆகிய தேன் பிராண்ட்டுகள் கலப்படமானவை என்பது தெரியவந்திருக்கிறது. எனவே இந்த தேன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஆனால், இதனை ஜண்டு, டாபர், பதஞ்சலி ஆயுர்வேதா, அபிஸ் ஹிமாலயா ஆகியவை மறுத்துள்ளன. தங்கள் நிறுவனத்தின் தேன் கலப்படம் அற்றது என்று சொல்கின்றன.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் உணவு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு என்பது மத்திய உணவுபாதுகாப்பு மற்றும் தர அதிகார அமைப்பு நிர்ணயித்த ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

டிஎம்ஆர் எனப்படும் ஆய்வை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் உணவு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். ஆனால், உணவு பாதுகாப்பு மற்றும் தர அதிகார அமைப்பானது  தேன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எஸ்எம்ஆர் எனப்படும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று விதியை வகுத்திருக்கிறது.

 விதிமுறைகள்படி ஆய்வு செய்யாதபோது எப்படி கலப்படம் என்று சொல்ல முடியும் என்ற கேள்வியை இந்த நிறுவனங்கள் எழுப்புகின்றன. எனவே முன்னணி நிறுவனங்களின் தேன் கலப்படமானதா இல்லையா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.


Comments


View More

Leave a Comments