மீன், சிக்கனுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது…


உணவு முறைகளாலேயே நமது உடல் நலத்தை பேணி காக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. உணவு முறையிலும், எந்த உணவை எதோடு சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற நடைமுறைகளும் இருக்கின்றன. அதை தெரிந்து கொண்டு உணவு உண்ணுவது நல்லது.அதே போல சில உணவுப்பொருட்களை எப்படி பயன்படுத்தினால் அதன் பூரணமான சத்துகள் கிடைக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஒரு வாரத்துக்கு முன்னாடி சொந்த ஊருக்கு போயிருந்தேன். அப்போ நெருங்குன சொந்தங்களை ரொம்ப நாளைக்குப் பிறகு சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. சந்திச்ச பலபேர் எதாவது ஒரு உடல் பிரச்சினையோட இருக்கிறத பார்க்க முடிஞ்சது. 

Must Read:முருங்கை விதையின் மருத்துவ அற்புதங்களை தெரிந்து கொள்ளுங்கள்…

அஞ்சு வயது பிள்ளைல இருந்து 50 வயசு, 60 வயசுன்னு எல்லோருக்கும் எதாவது ஒரு உடல் தொந்தரவு. கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று சொல்லவேண்டிய ஒரு சூழல் ஏற்படலாம். அந்த அளவுக்கு மக்களுக்கு நோய்கள், உடல் தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னாடி ஒரு பெண்மணி ஒரு பிரச்சினைக்காக மருந்து கேட்டாங்க. அப்போ, அவங்களோட சாப்பாடு முறை பத்தி கேட்கும்போது அவங்க வெளிப்படையா பதில் சொல்லாம சுத்தி வளைச்சி பதில் சொன்னாங்க. ஆனாலும் அவங்க வெளி உணவுகளைத்தான் அதிகமா சாப்பிடுறாங்கங்கிறதையும், அதனாலதான் அவங்களுக்கு சில உடல் பிரச்சினைகள் வந்திருக்குங்கிறதையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது. அதை சுட்டிக்காட்டி உணவுப்பழக்க வழக்கத்தை மாத்துங்கன்னு சொன்னேன்.

சிக்கனுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிடக் கூடாதுஇன்னைக்கி நாம நினைச்சாலும்கூட சிலதை மாத்த முடியல. ஒண்ணு ரெண்டு உதாரணத்தை சொல்றேன். ஆம்லெட் போடுறதுக்காகவும், பிரியாணி... இல்லன்னா சிக்கன் 65 கூட தொட்டுக்கிறதுக்காகவும் வெங்காயம் தருவாங்க. அது எப்ப வெட்டி வச்சதுன்னு எத்தனைபேருக்கு தெரியும்? வெங்காயத்தை வெட்டி வச்சா அது சுற்றுப்புறத்துல உள்ள கிருமிகளை உள்வாங்கி வச்சிக்கிடும். நல்ல சுத்திகரிப்பான்னு சொல்லலாம். ஆனா, அதை நம்ம சாப்பிட்டா என்னாகும்? அம்மை நோய் வரும்போது சின்ன வெங்காயத்தை வெட்டி வச்சா அது கிருமிகளை இழுத்து வச்சிக்கிடும். இதனால மத்தவங்களுக்கு அம்மை வராது. அம்மை வந்தவங்களுக்கும் பெரிய பாதிப்பு வராது. ஏன்னா... வெங்காயம் நல்ல கிருமிநாசினி.

Must Read: தோல்நோய்களை குணப்படுத்தும் கருடக்கொடி…

அதேமாதிரி சிக்கன்கூட தயிர் பச்சடி தருவாங்க. அந்த சேர்க்கை சரியில்லங்கிறது எத்தனை பேருக்கு தெரியும்? மீன் கூடயும், சிக்கனோடயும் தயிர் சேர்த்து சாப்பிட்டா அது தோல் நோய் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சில ஆய்வுகள் சொல்லுது. முக்கியமா வெண்புள்ளி வர்றதுக்கு இது ஒரு காரணமா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, நம்ம மக்கள் சொல்வாங்க. எல்லா ஓட்டல்லயும் அப்பிடித்தான் தர்றாங்க. எல்லோருக்கும் பாதிப்பா வருதுன்னு கேள்வி கேக்குறாங்க.இந்தமாதிரி நிறைய விஷயங்களை சொல்லிக்கிட்டே போகலாம்? அகத்திக்கீரை சாப்பிட்டு தண்ணி அடிக்கிறது, நான்வெஜ் சாப்பிடுறதும் சரியில்லைங்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்?

-எம்.மரியபெல்சின்

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#HowToEatFood #DontEatCurdWithFishAndChicken  #DontEatNonVegWithLiquor


Comments


View More

Leave a Comments