‘’நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரான உணவு பழக்கங்கள் அவசியம்’’ -இயற்கை மருத்துவர் தீபா சரவணன்
தொலைக்காட்சிகளிலும், செய்தி தாள்களிலும், சமூக ஊடங்கங்களில் அன்றாடம் நாம் அடிக்கடி கேட்கும் சொல்லாகிவிட்டது எதிர்ப்பு சக்தி எனும் சொல். எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட அவர்களை குணப்படுத்துவது எளிது என்றும் சொல்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரில் எந்தவித இணை நோயும் இல்லாத, இளைஞர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.
எனவே இந்த தருணத்தில் நாம் ஒவ்வொருவருமே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எதிர்ப்பு சக்தி எப்படி எல்லாம் பாழாகிறது என்றும் அதனை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நம்மிடம் பேசிய இயற்கை மருத்துவர் தீபா சரவணன்(Associate professor and medical officer at Govt. Yoga & Naturopathy Medical College, (GYNMC) Chennai),கூறுகிறார்.
“நம்முடைய உணவு பழக்க வழக்கம் சீராக இல்லாவிட்டால், எதிர்ப்பு சக்தி குறையும். எதிர்ப்பு சக்தி இல்லையெனில் உடலில் நோய் எதிர்ப்பு முறை பாதிப்பு ஏற்படுத்துகிறது. பழங்கள், காய்கறிகள் அதிகமாக சாப்பிடும் போது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எதிர்ப்பு சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்படுகிறது.
நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை தாக்குவது நம்முடைய உணவுப் பழக்கங்கள் தான். அதாவது ஜங்க் புட்ஸ் எனப்படும் உணவுகள்தான் முக்கிய காரணம். அதே நேரத்தில் பீட்சா பர்கர் போன்ற உணவுகள் மட்டும் முழு காரணம் அல்ல.
ஆரோக்கியமற்ற உணவுகள் எதையெல்லாம் நாம் உண்கின்றோமோ அவையெல்லாம் ஜங்க் புட்கள் தான். பாக்கெட் அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள், பேக்கரி ஐட்டங்கள், மைதா, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் எல்லாம் ஜங்க் புட்கள் தான்.
ஜங்க் புட்களை எல்லாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதாக நோய் தொற்றுக்கு நாம் ஆளாக நேரிடும். .ஒரு முறை நோய் தொற்றுக்கு ஆளாகி விட்டால் அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி திறனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
நம் உடலில் உள்ள எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கிறது. உணவில் அதிகம் ஜங்க் ஃபுட் எடுத்துக் கொண்டால் அதன் செயல் புரியும் தன்மை குறைகிறது.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அதிக அளவு உண்ணும்போது அலர்ஜி ஏற்படாது .நம் உடலின் ஆக்சிஜனேற்றத்துக்கான பாதிப்புகள் குறைந்து வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை அதிகரித்து எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கிறது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்கலாம்,” என்று கூறினார்.
பா.கனீஸ்வரி
#JunkFoodReduceImmunity #HealthyFood #Immunity #ImmuneSystem
Comments