பொதிகைச்சோலையில் மார்ச் 11ஆம் தேதி வேளாண்மைப் பயிற்சி முகாம்
திணை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் இயற்கைவழி ஒருங்கிணைந்த வேளாண்மைப் பயிற்சி முகாம், தென்காசி மாவட்டம் மேற்குத் தொடரச்சிமலை அடிவாரத்தில் உள்ள தலையணை அருவியின் அருகில் உள்ள பொதிகைச்சோலை கூட்டுப் பண்ணைய வாழ்வூரில் வைத்து வரும் மாசி 27-28 (மார்ச் 11-12) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
பாமயன் குழுவினர் முகாமை நடத்தவுள்ளனர். கருத்துரைகள், களப்பயிற்சிகள் வழி பயிற்சி நடைபெறும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலங்களைப் பகுத்து அதற்கேற்ப பண்ணையை வடிவமைத்துச் செய்யும் தெளிவான விளக்கங்கள், மாதிரிகள் உண்டு.

பகுவோகாவின் இயற்கை வேளாண்மை, பில்மோலிசனின் பெர்மாகல்சர், ஸ்டெய்னரின் பயோடைனமிக் பண்ணையம், தபோல்கரின் நேடிகோகல்சர், பாமயனின் திணையியல் பண்ணையம் போன்ற சிந்தனைகள் விளக்கப்படும்.
Must Read: அற்புத பலன்களை தரும் முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்
அடிசில் சோலை (food forest) முதலிய அணிநிழற் காடு வகைள் (multilayer forest gardening) தாதெரு மன்றம் (compost) தொய்யாத்துடவை (no tilling farm) பழனம் (rice-fish culture) முதலிய சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட வேளாண் நுட்பங்கள் மாதிரிகளுடன் விளக்கப்படும்.
ஆசாரக்கோவை, திரிகடுகம் போன்ற இடுபொருட்கள் விளக்கப்படும். இருபது பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பதிவு அவசியம். உணவு தங்குமிடம் யாவும் உட்பட உரூ. 2000/- மட்டும்.அனைத்துத் தொடர்புகளுக்கும் 8072215581 என்ற எண்ணில் அழைக்கவும்.
#SelfsustainableFarming #Agritraining #farmtraining #organicfarming

Comments
View More