சாப்பிட்ட பிறகு குளிக்காதீர்கள்


வாழ்க்கை முறைக்கும், உணவு உண்ணுவதற்கும் காலகாலமாக நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. நமது மூத்தோர்கள் உணவு முறையிலும், வாழ்க்கை  முறையிலும் அதற்கான விதிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தனர். அதே போன்றதொரு வாழ்க்கை முறையை நமக்கும் கற்றுக் கொடுத்தனர்.

உணவு உண்டபின்னர் குளிக்கக் கூடாது என்பது முதியோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த ஒன்றுதான். இதைத்தான் இன்றைக்கு மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.

சாப்பிட்ட உடனே குளிப்பதால் உடலில் உள்ள வெப்ப நிலையில் சமநிலைத் தன்மையில் மாறுபாடு ஏற்படும். உணவை செரிக்க உதவும் வயிற்றுப் பகுதியில் வெப்பம் குறையத் தொடங்கும். உணவு செரிப்பதில் பிரச்னை ஏற்படும். வெந்நீரிலும் குளிக்கக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.

ஆயுர்வேத பாரம்பர்ய மருத்துவத்தில் நமக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர். நாம் உணவு உண்டபின்னர், உடலில் வெப்பம் அதிகரித்து, உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகின்றன. அது உணவை துரிதமாக செரிக்க உதவுகின்றன. உணவு சாப்பிட்ட உடன் குளிப்பதால், வெப்ப நிலை குறைந்து செரிமானப் பிரச்னை ஏற்படும். எனவே, சாப்பிட்டபின்னர் ஒருமணி நேரம் வரை குளிக்க க் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பே குளிக்க வேண்டும். இதை மறந்து விட வேண்டாம்.


Comments


View More

Leave a Comments