கோதுமை, மைதா உணவுகள் நல்லதல்ல-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தல்
சிறு குழந்தைகளுக்கு பிஸ்கட் வேண்டாம்
பிஸ்கட் காரணமாக வயிற்றுப்போக்கு
பெரியவர்கள் கோதுமை உணவுகளை நிறுத்தலாம்
கோதுமை உணவுகளால் மூட்டு வலி வரலாம்
தம்பிக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு செல்வது தான் பிரச்சனை என்றார்.
சரி வழக்கம் போல் வரலாறுக்குள் செல்வோம் என்று வரலாறை கேட்கத்தொடங்கினேன்.
நார்மல் டெலிவரி , பிறப்பு எடை 2.800 கிலோ கிராம்,பிறந்தவுடன் சரியாக அழுதுவிட்டான், பத்து மாத தடுப்பூசி வரை சரியாக கொடுக்கப்பட்டுள்ளன,
ஒன்றரை வயது தடுப்பூசி குறித்து தாய்க்கு தெரிந்திருக்கிறது - சபாஷ்
தாய்ப்பால் - ஏழு மாதம் வரை கிடைத்திருக்கிறது .
ஏன் ஏழு மாதத்தோடு நின்றது ? என்று கேட்டேன். அதற்கு மேல் பால் வரவில்லை என்பது பதில் சொன்னார். அடிக்கடி வயிற்றுப்போக்கு போவது எப்போது இருந்து ஆரம்பித்தது? என்றதற்கு எட்டாவது மாதத்தில் இருந்து என்று கூறினார்.
ஏன் திடீரென எட்டாவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் பசுவின் பால் ஆரம்பித்தீர்களா? என்றதற்கு ஆமா சார்.. பசும்பால் எட்டாவது மாசத்துல இருந்து ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து தினமும் நாலு அஞ்சு தடவ செரிக்காம மோஷன் போனான் என்றார்.
ஓகே. அது lactose intolerance என்கிற பசும்பாலில் இருக்கும் லேக்டோஸ் என்ற மாவுச்சத்துக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமையாக இருக்கும்.
சரி.மருத்துவரை சந்தித்தீர்களா என்று கேட்டேன்.
ஆமா சார். உடனடியா பசும்பால நிறுத்த சொன்னாங்க. பவுடர் பால் எழுதிக்கொடுத்தாங்க. அதக்கொடுக்க ஆரம்பிச்சதும் நின்னுடுச்சு என்றவரிடம் அருமை.. லேக்டோஸ் இல்லாத பவுடர கொடுக்க ஆரம்பிச்சதும் நின்னுடுச்சு. இப்ப ஏன் திரும்ப வயிற்றுப்போக்கு வந்துருக்கு? என்று கேட்டேன்.
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
கோதுமையில் உள்ள அலர்ஜி பொருள்
அதான் சார் தெரியல என்றவரிடம், நீங்க கொழந்தைக்கு பிஸ்கட் கொடுக்குறீங்களா? என்று கேட்டேன். ஆமா சார்..பிஸ்கட் கொடுக்கிறேன் சார். அதத்தான் சார் விரும்பி சாப்டுறான். வேற எதையும் சாப்ட மாட்டேங்குறான் என்றார்.
டெய்லி எத்தனை பிஸ்கட் மா?
ஒரு பாக்கெட் சாப்டுவான் சார்.
உங்க புள்ளைக்கு இன்னொரு அலர்ஜியும் இருக்கு ?
அப்டியா சார். அது என்னது சார்?
க்ளூடன் அலர்ஜி. கோதுமைல செய்யப்பட்ற எந்த பண்டமும் இவனுக்கு ஆகாது. முதல்ல அந்த பிஸ்கட்ட நிறுத்துங்க. இவனுக்கு வயிற்றுப்போக்கு சரியாகும் வாய்ப்பு அதிகம். கோதுமைல க்ளூடன் என்கிற ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள் இருக்கு. அது பல பேருக்கு ஒத்துக்காது. காரணமில்லாம வயிற்றுப்போக்கு , செரிமானமின்மை , நெஞ்செரிச்சல் இருக்கவங்க கோதுமைய நிறுத்திப்பார்க்கலாம். மேலும் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கவங்க.. முடக்கு வாதம் இருக்கவங்க கோதுமையை நிறுத்திப்பார்க்கலாம் மேலே சொன்னவை "Gluten intolerance " ஆ இருக்கலாம்.
பொதுவாக குழந்தைகளுக்கு கோதுமை மைதா கொடுப்பதை முடிந்தவரை தள்ளிப்போடுவது சிறந்தது ஆனால் நம் ஊரில் குழந்தைகளின் ஆஸ்தான உணவாக பிஸ்கெட்டுகள் இருப்பது கவலைக்குரிய விசயம்
Also Read: குதிகால் வலி தீர ஏற்ற உணவு முறைகளும், தீர்வுகளும்
நீரழிவு பாதிப்பு உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடலாமா?
எனது கிளினிக்குக்கு வரும் வயது முதிர்ந்த நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்டிரில் பலர் தாங்கள் கோதுமையை உண்ணும் போதெல்லாம் மூட்டு பகுதிகளில் முக்கியமாக கால் முட்டி மற்றும் கனுக்கால் மூட்டில் எப்போதெல்லாம் சப்பாத்தி அல்லது கோதுமை தோசை உண்கிறோமோ அப்போதெல்லாம் அதிகம் வலி எடுக்கிறது என்றனர்.
நான் கோதுமை உண்பதற்கும் வலிக்கும் தொடர்பு என்ன இருக்கப்போகிறது ? என்றே நினைத்தேன் எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஒரு மாத காலமாக இடை விடாத வயிற்றுப்போக்கு. தினமும் காலை உணவு உண்டவுடன் வயிற்றுப் போக்கு வந்துவிடும் என்றார்
நான் அவரிடம் கூறிய ஒரே விசயம்
உங்கள் உணவில் கோதுமை தினமும் சேர்த்து வருகிறீர்களா ?
ஆம். தினமும் சப்பாத்தி எடுத்து வருகிறேன் என்றார்
அதை நிறுத்திப் பாருங்கள் என்றேன்
சப்பாத்தியை நிறுத்திய அடுத்த நாளில் இருந்து வயிற்றுப்போக்கு நின்றதாக கூறினார் சமீபத்தில் என்னிடம் பேசிய நெருங்கிய நண்பர் . தான் தீராத மூட்டு வலியால்( reactive arthritis ) பாதிக்கப்பட்டதாகவும்
அதற்காக ஸ்டிராய்டு மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும் , கோதுமை குறித்த விழுப்புணர்வு தனக்கு ஏற்பட்டவுடன் கோதுமையை நிறுத்தி விட்டதாக கூறினார் அன்றிலிருந்து தனது மூட்டுகளில் இருந்த வீக்கம் குறைந்தத்கவும் ஸ்டீராய்டு உண்ண வேண்டிய நிலை இல்லாமல் போனதாகவும் தெரிவித்தார்
ஒவ்வாமை பொருட்கள்
கோதுமையில் உள்ள க்ளூடன், ஜெர்ம் அக்ளூடனின் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் நமது குடலில் leaky gut syndrome என்ற நிலையை உருவாக்குகிறது இதனால் குடலில் இருந்து செரிமானம் ஆகும் உணவு மற்றும் கழிவு இரண்டும் ரத்தத்தில் கலக்கிறது இது ரத்தத்தில் தேவையற்ற மாற்றங்களை உருவாக்குகிறது இந்த இன்ப்லமேசன் எனும் உள்காயம் பல மூட்டுகளையும் தாக்குகிறது இதனால் மூட்டு வாதம் போன்ற பல ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் தோன்றுகின்றன
கோதுமையை பாரம்பரிய உணவாக உண்ணும் வட இந்தியாவில் ஆட்டோ இம்யூன் வியாதிகள் தென்னிந்தியாவை விட அதிகம் மேலும் நாமும் கடந்த இருபது ஆண்டுகளாக கோதுமை மைதா போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்துள்ளதால் நமக்கும் ஆட்டோ இம்யூன் வியாதிகள் அதிகமாக வருகின்றன. அமெரிக்காவில் கோதுமையை உட்கொள்ளும் மக்களிடையே அதிகமாக காணப்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகளை சரி செய்ய க்ளூடன் இல்லா உணவுகளை பரிந்துரை செய்கின்றனர் (gluten free diet) கோதுமை, மைதா இரண்டிலும் நமக்கு பல கேடுகள் உள்ளன என்பதை தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்
-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா.பொது நல மருத்துவர், சிவகங்கை
#DrABFarooqAbdullah #AvoidWheatAndMaidaFoods #UnhealthyOFWheatAndMaidaFoods #DontGiveBiscuitsToChild #AvoidBiscuits #CureForChildrenStomachissues
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai
Comments