
ஒரு வேளைக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் உன்னத தம்பதி..
ஒரே ஒரு காஃபியின் விலை 100 ரூபாய்க்கு விற்கும் இதே நாட்டில்தான் ஒரு ரூபாய்க்கு உணவு கொடுக்கும் நபரும் இருக்கிறார். ஈரோடு நகரில் அன்றாடம் ஏழைகள், எளியவர்கள் வரும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோருடன் வரும் நபர்களுக்கு வெங்கட்ராமன் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்த உன்னத சேவையை வழங்கி வருகிறார்.
Must Read: சென்னை ஃபேமஸ் வடகறி இனி ஐதராபாத் உணவுப் பிரியரும் ருசிக்க முடியும்…
15 ஆண்டுகளுக்கும்மேலாக ஒரு ரூபாய்க்கு உணவு சமைத்து வழங்கி வரும் தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வழக்கமான உணவு விடுதியைப் போலவே காலையில் டிபனும், மதியம் முழு சாப்பாடும், இரவு சிற்றுண்டியும் வழங்கி வருகின்றனர்.
விலை என்பது ஒரு வேளைக்கு ஒரு ரூபாய் மட்டும்தான், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவையை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறான மலிவு விலையில் தினமும் 50 பேர் வரை உணவு வழங்கி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் உணவு கேட்டு வந்தால், அதிலும் ஒரு சலுகையாக 20 சதவிகிதம் குறைவாகவே கட்டணம் பெற்றுக்கொள்கிறார். அவரது இந்த சேவை மனப்பான்மைக்கு அவரது மனைவி ராஜலட்சுமி உறுதுணையாக இருக்கிறார். .
Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை
பெரும் அளவுக்கு வாடகை கொடுத்து உணவகம் நடத்துவோரே அன்றாடம் உயர்ந்து வரும் விலை உயர்வால் தவிக்கின்றனர். உணவகத்தின் செலவுக்கும், வரவுக்கும் இடையே பற்றாக்குறை ஏற்படுவதாக சொல்கின்றனர். ஆனால், வெங்கட்ராமன்-ராஜலட்சுமி தம்பதியின் இந்த முயற்சிக்கு பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதனால்தான் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்ந்து வருகின்றனர்.
#OneRupeeMealsAtErode #TNManSellsOneRupeeMeals #OneRupeeHotel
Comments