தாய்வழி இயற்கை உணவகத்தின் தனித்தன்மையான வெற்றிக்கதை


 

சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நல்ல லாபம்கிடைத்து வந்தது. அப்போது ஒரு ஒருமுறை அவரது அம்மாவுக்கு காலில் மூட்டு வலி ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக அவர் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரது நண்பர்கள் சிலர் முடக்கத்தான் கீரையில் ரசம் வைத்துக் கொடுத்தால் மூட்டு வலி குறையும் என்று கூறி உள்ளனர். இதையடுத்து அவர் முடக்கத்தான் கீரைகள் வாங்கி ரசம் தயாரித்து எடுத்து தமது தாய்க்கு கொடுத்தார். ஒரு மா த  த்தில் அவரது மூட்டு வலி முற்றிலும் அகன்று விட்டது. மருத்துவர்கள் சொன்னபடி அவர் அவரது அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை. முடக்கத்தான் கீரையே அவரது மூட்டுகளை சரி செய்து விட்டது.

இந்த சொத்த அனுபவத்தால், இதுபோல் பல நோய்களுக்கும் நமது இயற்கை பாரம்பர்ய முறையிலேயே தீர்வுகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். இதையடுத்து அதுகுறித்த ஆராய்ச்சியில்ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக முதலில் வீட்டிலேயே இயற்கை உணவுகளை தயாரித்து தமது இருசக்கர வாகனத்தில் சிவகாசி முழுக்க விற்பனை செய்தார். அதில் பரவலாக அவருக்கு அறிமுகம் கிடைத்தது. இதனை அடுத்து வங்கியில் கடன் பெற்று  தாய்வழி இயற்கை உணவகத்தை அவர் தொடங்கினார்.

இந்த உணவகத்தில் இயற்கை உணவுப் பொருட்கள் மட்டுமே தயாரித்து விற்கப்படுகின்றன. குறிப்பாக மூலிகைகளைக் கொண்டு பதினெட்டு வகையான நோய்களுக்கு உணவுகளை தயாரித்து குறைந்த விலையில் வழங்கி வருகின்றார். சிவகாசியில் தலைமை தபால் நிலையத்தின் அருகில் இருக்கும் அவரது உணவகத்துக்கு தினமும் பலர் வந்து பயன்பெற்று செல்கின்றனர்.


Comments


View More

Leave a Comments