இயற்கை விவசாயம் கொள்கைக்கான சில முன் மொழிவுகள்


தமிழ்நாடு அரசு தயாரித்து வரும் இயற்கை விவசாயம் கொள்கைக்கான சில முன் மொழிவுகளை இயற்கை விவசாய ஆர்வலர், இயற்கை விவசாயி செந்தமிழ் செல்வன் முன் வைத்துள்ளார். 

இயற்கை விவசாயம் என்றே பெயரிடலாம்

ஆர்கானிக் என்கிற சொல்லாடலுக்கு பதில் “ இயற்கை விவசாயம் “ என்றே பயன்படுத்தலாம்.  கொள்கை ரீதியாக இயற்கை விவசாயத்தை மாநில முழுவதும் கொண்டு வர திட்டமிடுவது. அதனைப்படிபடியாக அமுல்படுத்துவது. பத்தாண்டுகளில் 100% இலக்கை அடைவது. முதல் நான்கு ஆண்டுகளில் 25% நிலங்களில் இயற்கை விவசாயத்தை நிறுவுவது. நான்காவது ஆண்டில் இறுதியில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு திட்டம் வகுப்பது.

முதல் நான்காண்டுகளில் சிறு/ குறு விவசாயிகளை மையப்படுத்துவது. இவர்களுக்கான சான்றிதழை பஞ்சாயத்து அளவில் பதிவின் அடிப்படையில் வழங்குவது. இந்த இயற்கை விவசாயப் பொருட்கள் மாவட்டம்/மாநில அளவில் மட்டும் விற்பனை செய்வது. முதல் மூன்றாண்டுகளுக்கு இயற்கை விவசாய ஊக்கத் தொகை வழங்குவது. அந்தந்த பகுதிக்கேற்ப  இந்தத் தொகை மாறுபடலாம். 

இரசாயனங்கள் பயன்பாடு கண்காணிப்பு 

பிற விவசாயிகளுக்கு வழக்கமான சான்றிதழ்கள் எளிமைப்படுத்தப்பட்டு வழங்கப்படும். சிறு/ குறு விவசாயிகளுக்கும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு இந்த சான்றிதழ் வழங்கலாம். பழுக்க வைப்பதற்கு இரசாயன ஊக்கிகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்.

Must Read: ஆன்லைன் உணவு விநியோகத்தில் 9ம் இடம் பிடித்த ஸ்விக்கி

பதப்படுத்துதல்/ மதிப்புக்கூட்டுதலிலும் இரசாயனங்கள் பயன்பாட்டை கண்காணிக்கப் பட வேண்டும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கை விவசாயத்தைப் பிரச்சாரம் செய்ய தனி அமைப்பு  உருவாக்க வேண்டும். இது இயற்கை நேசிப்பினையும் வலியுறுத்தும். மண் நலம்தான் மக்கள் நலன் என்பதையும் பிரச்சாரம் செய்யும்.

இயற்கை விவசாயம் என பெயரிடலாம்   

நகர்புறங்களிலும் காலியாக உள்ள அரசு இடங்களிலும் தனியார் வீடுகளின் மாடிகளிலும் மாடித்தோட்டம் அமைக்க திட்டம் வகுக்கப்படும் இங்கு இரசாயன உரங்கள் போடுவது முழுக்க தடை செய்யப்பட வேண்டும்.

கைவிடப்பட்ட நிலங்களில் மீண்டும் இயற்கை விவசாயம் 

கடந்த 25 ஆண்டுகளில் விவசாயம் கைவிடப்பட்ட நிலங்களை சர்வே செய்ய வேண்டும். அதில் 25% நிலங்களை நான்காண்டுகளில்  மீண்டும் இயற்கை விவசாயம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளில் விவசாயம் கைவிடப்பட்ட  அனைத்து நிலங்களும் 100% மீண்டும் இயற்கை விவசாயம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் வங்கிக்கடன்கள் அதே விகிதத்தில் வழங்க வேண்டும். இயற்கை உரங்களின் விலையினை விவசாயச் செலவினமாக அங்கீகரிப்படலாம் .

பசுமை பண்ணைத் திட்டம் 

முதல் நான்கு ஆண்டுகளுக்கு நலங்குன்றா உணவு மக்களுக்கு கிடைக்க கீழ்கண்ட பசுமைப்பண்ணைதிட்டத்தை அமுல்படுத்தி 1000 பசுமைச் சந்தைகளை உருவாக்கி செயல்படுத்த வைப்பது.

நோக்கம்:

இயற்கை விவசாயத்தை நான்கு ஆண்டுகளில், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 25% விளை நிலங்களில் விரிவுப்படுத்துவது..  மக்களுக்கு நலம்குன்றா உணவு கிடைக்க 1000 “பசுமைச் சந்தைகள்” உருவாக்குவது.

செயல்திட்டம்:

விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் மீது இருக்கும் தயக்கங்களை நீக்கி உற்சாகத்துடன் பங்கேற்க , கீழ்கண்ட செயல் திட்டம் உருவாக்கலாம்.

Must Read: பற்கள், ஈறுகள் வலிமையாக இருக்க மீன் உணவுகள் உண்ணலாம்..

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செய்பவர்களுக்கு வழக்கமான சான்றிதழ் வழங்கலாம்பயிற்சி, இடுபொருள் மற்றும் விற்பனை என மூன்று தளத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவு. உத்தரவாதப்படுத்த வேண்டும். “பசுமைப்பண்ணை தொடர்பு மையம்” ஒவ்வொரு ஒன்றிய அளவில் உருவாக்க வேண்டும். 

இந்த தொடர்பு மையத்தில், பயிற்சி மையமும், கொள்முதல்-விற்பனை மையமும் இணைந்து இருக்கும்.பயிற்சி மையம்  விவசாயிகளுக்கு பயிற்சி, ஆலோசனை மற்றும் நிலங்களுக்கேச் சென்று வழிகாட்டுதல்கள் தரும். பல விவசாயம் தொடர்பான  தகவல்கள். இங்கு கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கான நூலகமும் இந்த பயிற்சி மையத்துடன் இணைக்க வேண்டும்.

கொள்முதல்- விற்பனை மையத்தில் விவசாயிகளுக்கு விதைகள், இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மானியத்தில் கிடைக்கும். ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்பவர்கள் உற்பத்தி செய்து இந்த மையத்தில் வைக்கலாம். இயற்கை விவசாய காய்கறிகள், பழங்கள் கீரைகள், அரிசி, சிறு தானியங்கள் இந்த மையத்தில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். 

Must Read: நல்ல தூக்கத்திற்கும், எலும்புகளை உறுதியாக்கவும் தேன் முருங்கை பிசின்

இயற்கை விவசாயம் கொள்கை முன்மொழிவு    

தமிழக முதல்வர் அவர்கள் தற்போது அறிவித்துள்ள காலை உணவு திட்டத்திற்கும் மதிய உணவு திட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.மாவட்ட  விற்பனை மையத்திலும்  பிற பசுமை சந்தையிலும் விற்பனை செய்யலாம்.

இந்த விற்பனை மையங்களை அரசே நடத்தலாம் அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர்கள்  ஆகியோருக்கும் தரலாம். 

நகர்புற பசுமைத் தோட்டம்:

நகர் புறங்களில் மாடித்தோட்டம் உருவாக்கிட உதவலாம். ஏற்கனவே தோட்டக்கலைத்துறை இதனை செயல்படுத்துவதை வேகப்படுத்தலாம். ஒன்றியத்தைப் போலவே பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவில் பயிற்சி மற்றும் கொள்முதல்-விற்பனை மையங்கள் துவக்கலாம். ஒன்றியப்பகுதிகளில் வாங்கி குடியிருப்புப் பகுதிகளில் விற்பனைச் செய்யலாம். மாடித்தோட்ட விளைச்சல்களும் வாங்கி விற்கலாம்..

தனி நபர் வீடுகள் மட்டுமின்றி பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வளாகங்களிலும் மாடிகளிலும் தேவையான உற்பத்திகளைப் பெருக்கலாம். இவை அனைத்தும் இயற்கை விவசாயப் பொருட்களாக அங்கீகரிக்கப்படும். இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள் பூச்சி விரட்டிகள் பயன்படுத்துவதை உத்தரவாதப் படுத்த வேண்டும். 

ஊராட்சி அளவில் விவசாய அலுவலர் ஒருங்கிணைப்பில் இயற்கை விவசாயிகள் ஐவரை இணைத்து இயற்கை விவசாயி பதிவினையும் கண்காணிப்பினையும் செய்யலாம். ஒன்றிய அளவில் ஒரு குழு இந்தக் குழுவுடன் தொடர்பும் வழிகாட்டுதலும் செய்யும். மாவட்ட அளவிலும் வழிகாட்டுதல்/ நெறிப்படுத்தும் குழுக்கள் உருவாக்கலாம். 

இயற்கை விவசாயம் முன்மொழிவு

விவசாயக் காய்கறிகள் பழங்கள் பேருந்துகளில் எடுத்துச் செல்லும் போது 30 கிலோ வரை கட்டணமில்லாமல் அனுமதிக்கலாம். அடையாள அட்டைக்கும் விலக்களிக்கலாம். படிபடியாக மகளிர் சுய உதவிக்குழுக்கள்/ இளைஞர்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்படும் பொருட்களையும் இணைக்கலாம்.மூலிகைத் தயாரிப்புகளையும் தகுந்த வகையில் சேர்க்கலாம்.

மக்களிடம் விழிப்புணர்வு :

இயற்கை விவசாயத்தின் தேவையினை பொது மக்களிடமும் மாணவர்களிடமும் கண்காட்சி மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு தரலாம். முன் மொழிவு :அறிவுத்தோட்டம் கு.செந்தமிழ் செல்வன், ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை, வேலூர் 9443032436 இந்தக் குறிப்பின் மீதான தங்களது கருத்துக்களை உடனடியாக எனக்கு

 senthamil1955@gmail.com  அல்லது 9443032436 வாட்ஸ் ஆப் எண்ணில் தெரியப்படுத்த வேண்டுகிறேன். அவை தொகுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். 


Comments


View More

Leave a Comments