போலியான நோய் எதிர்ப்பு சக்தி உணவுப் பொருட்களா? நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!
சூழலை பயன்படுத்தி எதையுமே சந்தைப்படுத்துவதில் பலர் கெட்டிக்கார ர்கள். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பற்பசை, நுண்ணூட்டசத்துகள், சோப்கள் என்று தினந்தோறும் விளம்பரங்கள் வரிசை கட்டி வந்துள்ளன.
அதே போல நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் என்ற பெயரில் உணவுப் பொருட்களும் விற்கப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி தருவதாகச் சொல்லி போலி விளம்பரங்கள் குறித்தும், போலியான உணவு வகைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய உணவு பாதுகாப்பு தரநிலை அதிகார அமைப்பு மற்றும் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் உடன் இணைந்து மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர தார ர்கள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி எதிர்ப்பு சக்தி நிறைந்த ஐஸ்க்ரீம் என்று விளம்பரம் செய்த ஒரு தென்னிந்நிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரபல பிரட் தயாரிப்பு நிறுவனமும் எதிர்ப்பு சக்தி வாய்ந்த பிரட் என்று விளம்பரம் செய்வதை நிறுத்தும்படி கோரிக்கைவிடப்பட்டுள்ளது. தவிர நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த பிரட் என்ற உணவையும் அந்த நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது.
இப்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரியாணி என்று கூறும் ஒரு நிறுவனத்தின் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இதுவரை இதுபோல விளம்பரம் செய்த 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Comments