புத்துணர்ச்சி தரும் தேநீர் அல்லது காஃபியை மிஸ் பண்ணும் மக்கள்..


தேநீர் கடைகள் என்பது தேநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், கடை வைத்திருக்கும் உரிமையாளர் என இருவர் மட்டுமே தொடர்புடைய வணிகம் அல்ல. 

தேநீர் கடையில் உள்ளார்ந்து ஊடுருவி இருக்கும் பால் வணிகம், பால் வணிக்கத்தை சார்ந்திருக்கும் முகவர்கள், பால் பாக்கெட் விற்பவர்கள், பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள், பாலை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் இப்படி எல்லாமே அடங்கியிருக்கின்றன. 

இந்த கொரோனா காலகட்டத்தில் தெருவுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கடைகள் என தமிழகம் முழுவதும் லட்சகணக்கான தேநீர் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதனை சார்ந்த பால் வணிகமும் முடங்கிப்போயிருப்பதை யாரும் மறுக்க முடியாது. 

பால் வணிகம் முடங்கி போயிருக்கிறது என்பதை விடவும் தினந்தோறும் கறக்கப்படும் லட்சகணக்கான லிட்டர் பால் வீணாகிறது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். கொரோனா முதலாவது அலை, இரண்டாவது அலை என தேநீர் கடைகள் அடிக்கடி மூடப்படுவது தொடந்து கொண்டிருக்கின்றன. 

இதையும் படியுங்கள்; சுவையான காஃபியின் தேடல்

உணவு என்று பார்க்கும்போது பால், தேநீர் இரண்டுமே நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத தாக இருக்கிறது. ஆற, அமர உட்கார்ந்து காலை உணவோ அல்லது மதிய உணவோ சாப்பிட முடியாதவர்களுக்கு பத்து ரூபாய்க்குள் ஒரு தேநீர் பெரும் வரபிரசாதம்.

 

வெறும் தேநீரை மட்டும் குடித்து பல மணிநேரம் உழைக்கக் கூடியவர்கள் இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். ஒரே ஒரு காப்பியை குடித்து விட்டு பல மணி நேரம் புத்துணர்ச்சியோடு இருப்பவர்களையும் நாம் காண்கின்றோம். 

இன்றைய தினத்தை தொடங்கும் முன்பு அதிகாலையில் ஒரு தேநீர் அல்லதுகாஃபி குடிப்பது நம் எல்லோரின் வழக்கமாகவே இருக்கிது. ஒரு நல்ல தேநீர் அல்லது காஃபி அன்றைய நாளின் நல்ல தொடக்கத்தைக்கொடுக்கின்றது. புத்துணர்ச்சி அளிக்கிறது. 

எனவே, விவசாயிகளின், பல லட்சகணக்கான தொழிலாளர்களையும் , கோடிக்கணக்கான நுகர்வோர்களையும் கருத்திக்கொண்டு தேநீர் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். 

குறிப்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி @PONNUSAMYMILK

வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்  #கொரோனா கால ஊரடங்கில் #தேநீர் கடை உரிமையாளர்கள், அவர்களை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் #பால் உற்பத்தியாளர்கள் என பல லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை இன்னும் முடக்குவது தமிழக அரசுக்கு அழகல்ல,” என்று கூறியுள்ளார். கடைசியாக கிடைத்த தகவலின்படி தேநீர் கடைகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார். இதற்கு. பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

கொரோனாவால் எல்லாவகையிலும் குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு  தேநீரோ அல்லது காஃபியோ ஒரு புத்துணர்ச்சியை அளிக்கட்டும்.

-பா.கனீஸ்வரி

 #Tea #Milk #CMOTamilnadu

 

Comments


View More

Leave a Comments