திருவண்ணாமலையில் 27ஆம் தேதி ஒரு நாள் மூலிகை மருத்துவ பயிற்சி


வானகம் மற்றும் மூலிகை மையம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு நாள் மூலிகை மருத்துவ பயிற்சி வகுப்பு திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. 

திரு. அன்புச்செழியன் அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்.  உடலுக்கு ஏற்ற உணவுகள் , சளி, காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கான கைமருத்துவம்,. குழந்தை நலன், ஐந்தறை பெட்டி அனுபவம்,,வாழ்க்கைமுறை மூலம் உடல் நலம் பேணுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 

திருவண்ணாமலையில் மூலிகை பயிற்சி

ஈசான்ய ஞானதேசிகர் மடம், ( ஈசான்யலிங்கம் எதிரில் ), திருவண்ணாமலை என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க கட்டணம் உண்டு. எனவே பயிற்சியில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்ய 6381483579 / 9789267520 / 9171090516 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகப்புப்படம் முந்தைய பயிற்சி ஒன்றின் போது எடுக்கப்பட்டதாகும். 

#HerbalMedicine #HerbalMedicineTraining #EventsAtThiruvannamalai 


Comments


View More

Leave a Comments