எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரகம் பாதிக்கப்படுவது அதிகரிப்பா?
தமிழ்நாட்டில் எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரக பாதிப்பு நேரிடுவது அதிகரித்திருப்பதாக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டோர் உடல் உறுப்புகள் தானம் கேட்டு பதிவு செய்வது அதிகரித்திருக்கிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் சிறுநீரக தானம் வேண்டி 6000 பேர் காத்திருக்கின்றனர்.
Must Read:பாரம்பர்ய சித்தமருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... மூத்த பத்திரிகையாளர்கள் நெகிழ்ச்சி!
இப்போதைய வாழ்க்கை சூழலில் அறியப்படாத காரணங்களால் நீண்ட கால சிறுநீரக நோய்- பாதிப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து ஆராய தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை சார்பில் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
மேலும் பேசிய கோபாலகிருஷ்ணன், “ சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கணக்கெடுப்பு நடத்திய போது 50 சதவீதம் பேர் தங்களுக்கு ஏன் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது என்ற காரணத்தை கண்டறிய முடிவில்லை என்று கூறியுள்ளனர்.
Must Read:முடி உதிர்வுக்கு தீர்வு கிடைக்க இதையெல்லாம் செய்தால் போதும்…
மண்டல அளவில் சிறுநீர பாதிப்புகள் உள்ளோரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளன. அதில் கண்டறியப்படும் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகரித்து வரும் வெப்பநிலையும் முக்கியமான காரணமாக உள்ளது. நோயை கண்டறிய அரசு மருத்துவமனைகளுக்கு வரும் வயதான நபர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை பாதிப்பு குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சிறுநீரில் புரதம் வெளிப்படுவதை கண்டறிய புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
#organdonation #kidneydisease #howaffectkidney
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments