உங்கள் உடல் எடையை சரியாகப் பராமரிக்க வேண்டுமா?


இந்திய உணவு வகைகளில் இயற்கையிலேயே பல்வேறு உடல் நலனுக்கான சத்துகள் உள்ளன. மஞ்சள், மிளகு, கிராம்பு, சீரகம், கடுகு போன்றவை உணவில் சுவைகளை சேர்ப்பதற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தருபவை. நம் உடலில் உள்ள அசுத்தங்களை அகற்றி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

உடல் எடையை சரியான முறையில் நிர்வகிக்க, நார்சத்து அதிகம் உள்ள ஊட்டசத்துகள் நிறைந்த காய்கறிகளை நாம் உண்ண வேண்டும். ராகிமால்ட் பானத்தை இரண்டு வாரம் தொடர்ந்து குடித்தால், உடல் எடை குறையும்.

பச்சைப் பயிறு, பாசிப்பருப்பு ஆகியவறை வாரம் தோறும் ஒரு முறை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எடையை உரிய அளவில் பராமரிக்க முடியும். புரதம், கொழுப்பு வைட்டமின் சத்துகளும் போதுமான அளவுக்கு கிடைக்கும். வெளியிடங்களில் அதிகம் உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை சமைத்து உண்பதே நல்லது.  

 

 


Comments


View More

Leave a Comments