தரமான கருப்பட்டியை எப்படி அடையாளம் காண்பது?


இயற்கை உணவுப் பொருட்கள் மீது எல்லோருக்கும் இப்போது அக்கறை வந்திருக்கிறது. இயற்கை உணவுப் பொருட்கள் சந்தையைப் பயன்படுத்தி பல போலி உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களும் வலம் வருகின்றன. எனவே கலப்படப்பொருட்களை அடையாளம் காணுவது மிகவும் முக்கியம். 

குறிப்பாக கருப்பட்டியை கலப்படமில்லாமல் வாங்கி உபயோகிப்பதுதான் உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். நமது நோக்கமும் நிறைவேறியதாக இருக்கும். அவசரத்தில் தரம் குறைவான ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கருப்பட்டியை வங்கிவிடக் கூடாது. 

திருநெல்வேலியைச் சேர்ந்த HNY eeB  என்ற நிறுவனத்தில் கருப்பட்டியை சுத்தமான முறையில் விற்பனை செய்கின்றனர். அந்த நிறுவனத்தின் சார்பில் நல்ல கருப்பட்டியை அடையாளம் காணுவது குறித்த வாட்ஸ் அப் தகவல் பகிரப்பட்டுள்ளது. அதனை இங்கே படிக்கலாம். 

நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியை போட்டால் அது முழுதாக கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும்.

கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும்போது கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்பதாகும்.

அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து சோதித்து பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால் உற்பத்தி குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாக தான் கருப்பட்டி கிடைக்கும்.

சுத்தமான தரமான கருப்பட்டி தேவைப்படுவோர் HNY eeB நிறுவனத்தை  9952290896  மற்றும்  8754364586 என்ற மொபைல் எண்களில் வாட்ஸ் ஆப்  செயலி வாயிலாக அணுகவும் 

 

 

 


Comments


  • Arun

    Yes, I am also one of the customer.

    Dec, 24, 2020
View More

Leave a Comments