உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சுண்டைக்காய் | சுண்டைகாயின் மருத்துவ பயன்கள்


 

கடுகளவு சுண்டக்காய்தான் ஆனால் அதில் கடலளவு சத்துகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா. சுண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டாலும் வற்றல் ஆக சாப்பிட்டாலும் எல்லாமே உடலுக்கு போதுமான சத்துகளை தருவதாகத்தான் இருக்கின்றன.

சுண்டைக்காயில் உள்ள சத்துகள்

சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி,சி ஆகிய சத்துகள் உள்ளன. ஆரஞ்சு, கொய்யா பழம், ப ப்பாளி ஆகியவற்றைப்போலவே சுண்டைக்காயிலும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

செரிமான சக்தியை தூண்டும்

இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். மேலும் உடல் சோர்வு நீங்கும்.  பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும்.  சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. ரத்த த்தில் தேவையற்ற கொழுப்பு படிவதை தடுக்கும் சக்தி கொண்டது.

உடல் நடுக்கம் குறைக்கும்

முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியை சரிசெய்யும்.  சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.

வயிற்றுப்புண்ணுக்கு நல்லது

சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் குணமாகும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

 

பச்சையாக உண்ணலாம்

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.  நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பதன் மூலம் நுண்புழுவால் உண்டான நோய்களை குணப்படுத்தும் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம். ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும். நரம்பு மண்டலத்துக்கு கூடுதல் சக்தி அளிக்கும், பார்வைத்திறன், நினைவாற்றல் அதிகரிக்கவும் சுண்டைக்காய் உதவும்.

 

 


Comments


View More

Leave a Comments