மருத்துவ காளான்களை உருவாக்கும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம்…


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் பல புதிய வேளாண் பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டில் புதிய ரக மருத்துவ காளான்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட்டு வரும் காளான் வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய சிப்பி காளான் ரகமாக இருக்கும். இந்த ரகமானது, மகசூல் அதிகமாகவும், உற்பத்தி சுழற்சி நாட்கள் குறைவாகவும் இருக்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு புதிய ரக சிப்பி காளான் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.பல்கலைக்கழகத்தின் காளான் அபிவிருத்தி மையம் சார்பில், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட, 10 புதிய ரககளும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Must Read: டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு… இனி செய்ய வேண்டியது என்ன?

தற்போது நாம் உணவுக்காக பயன்படுத்தும் காளான்களில், நார்சத்துக்கள் அதிகம் உள்ளன. அதன் சுவையைக் கூட்டி, மகசூல் அதிகம் தரும் ரகங்களாகவும் மேம்படுத்தும் வகையிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

கோவை வேளாண் பல்கலையில் சிப்பி காளான் குறித்து ஆராய்ச்சி

இது குறித்து தினமலர் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள காளான் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி திருவோணமாலா, உணவுக்காளான்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் , மருத்துவ காளான்களையும் சாகுபடி செய்ய பல்கலை தரப்பில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

மருத்துவ காளான்களில் உள்ள மூலக்கூறுகளை பயன்படுத்தி , சர்க்கரை பாதிப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மருந்துகளை , தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, சில மருத்துவ கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பதம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டில் புதிய மருத்துவ காளான்  ரகங்கள் வெளியிடப்படும்.தவிர, காளான்களை திறந்தவெளியில், வாழையில் ஊடுபயிராக சா குபடி செய்யவும், பிளாஸ்டிக் டப்பாக்களில், வீடுகளில்  தேவைக்கு அவரவர் மாடித்தோடங்களில் வளர்க்கும் வகையில் புதிய ரகங்களை உருவாக்குவது குறித்தும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

#Mushroom #newMushroomVarieties #cbeagriuniversity 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments