உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்


ஐந்து முக்கிய உணவுகள் 

ஆரோக்கியமான உணவுகள் 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

டிஜிட்டல் யுகத்தின் வேகத்துக்கு இணையாக பரபரவென்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த பரபர வாழ்க்கையில் நாம் இழப்பது சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைத்தான்.  நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய  தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை சரியான சமநிலையில் உணவின் மூலம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.உடலுக்கு சமநிலையான சத்துகளைத் தரும் உணவுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 

ஆப்ரிகாட் 

ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிக அளவு கொண்டிருக்கிறது ஆப்ரிகாட் பழம். இது தமிழில் பாதாமி என்று அழைக்கப்படுகிறது. பழங்களுடன் ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். 

ஆப்ரிகாட்டில் ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் உள்ளன

உடலில் கொழுப்பை குறைக்கும். இதன் வாயிலாக இதய நோய் அபாயத்தைத் தடுக்கமுடியும். ஆப்ரிகாட்டில் உள்ள நார்ச்சத்து மனித உடலின் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும்  கண் பார்வையை மேம்படுத்துகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

Also Read: கோதுமை, மைதா உணவுகள் நல்லதல்ல-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தல்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. ஆப்ரிகாட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. எனவே இது இரத்த சோகையை குணப்படுத்தவும் இந்த பழத்தை நாம் சாப்பிடலாம். பழமாக சாப்பிடாமல் உலர் பழமாகவும் இதனை சாப்பிடலாம். 

சீந்தில் அல்லது அமிர்தவல்லி 

மருத்துவ குணங்கள் நிறைந்த சீந்தில் மூலிகை  நீண்ட காலமாக இந்திய பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டதாகும்.  இது இரத்தத்தை சுத்தப்படுத்தி கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. சீந்தில்  உட்கொள்வதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம்.  மலச்சிக்கல் போன்ற குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.  சீந்தில் சாற்றை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம்  ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இது கீல்வாதத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும் சீந்தில் உதவுகிறது. 

நெல்லி 

நெல்லிக்காய் எந்தப் பழத்தையும் விட சக்தி வாய்ந்தது மற்றும் மிக சிறந்த இயற்கை உணவாக கருதப்படுகிறது. நெல்லியில் உள்ள வைட்டமின் சி, ஜலதோஷத்தை எதிர்த்து உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. நெல்லியில் உள்ள கரோட்டின் பார்வை திறனை மேம்படுத்துகிறது மற்றும் தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

நெல்லிக்காய் எந்தப் பழத்தையும் விட சக்தி வாய்ந்தது

நெல்லிக்காய் நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பாட்டுக்கு முன் நெல்லிக்காய்  உட்கொள்வது நிறைவான உணர்வைக் கொடுக்கிறது.   குறைவாக சாப்பிட உதவுகிறது. நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது எடை இழப்புக்கு உதவும். இந்த முடியில் பொடுகைத் தடுக்கிறது மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்தி முடியை அழகாக மாற்றும். 

ஜின்ஸெங்

ஜின்ஸெங் என்பது வெளிர் நிறமுள்ள, முட்கரண்டி வடிவ வேர் மூலிகை ஆகும், இது ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில் பலவீனமாகவும் சோர்வாகவும் இருப்பவர்களுக்கு உடல் மற்றும் மன செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, ஜின்ஸெங் வீக்கத்தை குறைக்கிறது. நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. 

அவுரிநெல்லிகள்

அவுரிநெல்லிகள் ஆங்கிலத்தில் ப்ளூபெர்ரி என்று அழைக்கப்படுகிறது. இது நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கியமான, சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளன. . அவுரிநெல்லிகளில் குறைந்த கலோரி உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.  

Also Read: தேனில் கலப்படத்தை கண்டறிவது எப்படி?

ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகளில் முதன்மையானது.  முதுமையை தள்ளிப்போடும்.  உயர் இரத்த அழுத்த பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக அவுரி நெல்லிகளை  உட்கொள்ளலாம். மேலும், இது இதய நோய்களைத் தடுக்கிறது மற்றும் மூளையின் செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது. 

-ஆகேறன் 

#Top5HealthyFoods   #5ImportantOrganicFoods  #HealthyOrganicFoods  #5இயற்கைஉணவுகள்

English overview: In this story we have mentioned five important organic foods like Apricots, Giloy, Amla, Ginseng, and Blueberries. These foods are important that we get the right balance of minerals, vitamins, carbohydrates and proteins in our diet to keep our body healthy.

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments