சென்னையில் 7ம் தேதி நம்மாழ்வார் பிறந்ததின திருவிழா…
சென்னை தாம்பரத்தில் ஏப்ரல் 07ம் தேதி நம்மாழ்வார் பிறந்ததின திருவிழா வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஐயா நம்மாழ்வாரின் நெஞ்சிற்கு நெருக்கமான நண்பர் . இயற்கை வேளாண் வல்லுநர் கரிம வேளாண் கூட்டமைப்பை சேர்ந்த ஐயா அறியனூர் ஜெயசந்திரன் "இயற்கை வேளாண் வளர்ச்சியும் ஐயா நம்மாழ்வாரும்" எனும் தலைப்பில் வேளாண் நுட்பங்கள் சார்ந்த சிறப்புரை வழங்குகிறார்
திரு.செய்யூர் பாலாஜி ("Indiana farms - Moms feed") அவர்களுக்கு சிறந்த இயற்கை விவசாயி விருதும் திரு.ராஜகணேஷ் அவர்கள் சிறந்த இயற்கை வேளாண் பயிற்றுநர் விருதும் வழங்கப்படுகிறது.
Must Read: இனி நானும் ஒரு விவசாயி…. சித்த மருத்துவர் சிவராமனின் அனுபவ பதிவு!
நம்மாழ்வார் விருது பெரும் சிறப்பாளர்கள் இயற்கை வேளாண்மை நுட்பங்களும் மதிப்பு கூட்டு உற்பத்தியின் சிறந்த அனுபவ பகிர்வுடன் பங்கேற்று சிறப்பிக்கின்றனர் " இயற்கை தாத்தா நம்மாழ்வார் " எனும் தலைப்பில் ( 7 முதல் 15 வயது வரையுள்ள ) குழந்தைகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் 7 முதல் 15 வரை குழந்தைகள் பங்கேற்க 8610457700 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் வீடியோவாக 3 நிமிடத்திற்குள் வரும்படி பதிவு செய்து 04-04-2024 குள் அனுப்புங்கள். சிறப்பாக பேசிய குழந்தைகளுக்கு 07-04-24 நிகழ்வில் விருதும் சான்றிதழ் பரிசுகளும் வழங்கப்படும்.
இது தவிர வள்ளுவம் இயற்கை சந்தையில் தூய இயற்கை உணவுகள் கிடைக்கும். பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் - சமையல் மண்பாண்டங்கள் கிடைக்கும்.
நிகழ்வினை வெற்றிமாறன் ஒருங்கிணைக்கிறார். அவரை 9566667708 , 7448558447 ஆகிய மொபைல் எண்களில் ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்வில் பங்கேற்க அனுமதி இலவசம்
தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் பின்புறம் , எம்.ஆர். திரையரங்கம் பின்புறம் - முத்துலிங்கம் வீதி புது மார்க்கெட், தாம்பரம் மேற்கு பகுதியில் பேபி உயர்நிலை பள்ளி ,(மிக அருகில்) நிகழ்வு நடைபெற உள்ளது. நிகழ்விடத்துக்கான கூகுள் வழி வழிகாட்டல் வரைபடம்; https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA
#Nammalvar_people_forum #organic #food #gardening #health #soil
ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments