டிசம்பர் மாதம் நடைபெறும் இயற்கை வேளாண்மை பயிற்சிகள் என்ன தெரியுமா?


இயற்கை வேளாண்மை பயிற்சிகள் 

சோற்றுக்கற்றாழை பயிற்சி 

மூன்று நாள் வேளாண் பயிற்சி

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதம் கீழ்கண்ட இரண்டு முக்கியமான பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிகள் பற்றித் தெரிந்து கொள்ள தகவலில் குறிப்பிட்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இந்த தகவல்கள் முழுக்க, முழுக்க சேவை அடிப்படையில் மட்டுமே வெளியிடப்படுகிறது. 

வானகம் நடத்தும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் 

மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி வரும் 08.12.2023 முதல் 10.12.2023 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இப் பயிற்சியில் :இயற்கை வழி வேளாண்மை, மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்,  மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை,  இடுபொருள் செய்முறை பயிற்சி ஆகியவை வழங்கப்படும். 

இது தவிர களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், கால் நடை பராமரிப்பு,  நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு, மரபு விளையாட்டு ஆகியவை இடம்பெறும். வானகம் கல்விக் குழுவினர் பயிற்சியை வழங்குவார்கள். வருகிற 08, டிசம்பர் 2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி 10 டிசம்பர் 2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

வானகம் நடத்தும் இயற்கை வேளாண் பயிற்சி

“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர்,கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 2,300/ (non-refundable)மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். தங்குமிடம் உணவு வழங்கப்படும்.  முன்பதிவு அவசியம். +91 94458 79292 என்ற மொபைல் எண் வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது) அரசு அறிவுறுத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது 

Must Read: இயற்கை வேளாண்மையை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி

பாலித்தின் பைகள், சோப்பு,ஷாம்பு, பேஸ்ட்,கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு; https://vanagam.org  https://vanagam.page.link/app


"சோற்றுக்கற்றாழை விவசாயப் பயிற்சி"

சோற்றுக்கற்றாழை (Aloe vera barbadensis Miller.L) என்னும் ஒரேயொரு தாவரத்தைப் பற்றி மட்டுமே வாழ்நாள் முழுதும் கற்றுக் கொண்டும் கற்பித்துக் கொண்டுமிருக்கிற - இந்திய அளவில் "அலோவெரா அய்யா" என்று அறியப்பட்ட திரு.இராம.சண்முகம், கோவை அவர்களும்.தமிழகத்தில் முதல் முறையாக சோற்றுக்கற்றாழை வேளாண்மைப் பயிற்சிப் பண்ணையை (The first kind of model farm for Aloe vera in Tamil Nadu) உருவாக்கியிருக்கும் இயற்கை விவசாயி மற்றும் வினோபா  சேவா  சங்கத்தின் இயக்குனருமான திரு. V.P.  செல்லமுத்து,   தென்னிலை  அவர்களும்  இணைந்து சோற்றுக்கற்றாழை பயிற்சி நடத்த  உள்ளனர்.

தமிழக விவசாயிகளுக்காக நடத்தவிருக்கும் "சோற்றுக்கற்றாழை வேளாண்மை, வணிகம் , தொழில் வாய்ப்புக்கள் பற்றிய ஒரு நாள் பயிற்சி 17-12-2023 ஞாயிறு -காலை 10 முதல் மாலை 5 வரை (எளிய சைவ மதிய உணவுடன்) திரு.வி.பி.செல்லமுத்து தோட்டம், கணக்குப்பிள்ளைப்புதூர், தென்னிலை பேருந்து நிறுத்தம்.(வெள்ளகோவிலுக்கும் கரூருக்கும் இடையில் -  திருச்சி நெடுஞ்சாலை.) என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

பயிற்சிக்காக கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால் பயிற்சியின்  பயன்களைக் கருதி பங்கேற்பாளர்கள் கொடுக்கும் விருப்ப நன்கொடைகள் [Pay-by-heart] ஏற்றுக் கொள்ளப்படும்.

யாரெல்லாம் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுப் பயனடையலாம்?   

(கீழே குறிப்பிட்டுள்ள 10 வகையான விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கு அடுத்த பயிற்சிகளில் வாய்ப்புத் தரலாம்)

(1) ஏற்கனவே இருக்கும் தென்னை, பாக்கு, மா, தேக்கு, நிலவேம்பு முதலிய நீண்டகால மரப்பயிர்களுக்கு அருகில், நடுவில் ஊடு பயிராக, துணைப் பயிராக மற்றும் வேலிப்பயிராக சோற்றுக்கற்றாழை வளர்க்க விரும்புபவர்கள்.

(2) மற்ற பயிர்கள் விவசாயம்  செய்வதற்குப் போதுமான தண்ணீர் வசதிஇல்லாதவர்கள். 

(3) மானாவாரி, தரிசு நிலங்கள் வைத்திருப்பவர்கள்.

(4) விவசாய நிலத்தில் அல்லது விவசாய நிலத்திற்கருகில் குடியிருந்து விவசாயத்தைக் கவனிக்க முடியாதவர்கள்.

(5) விவசாய வேலைக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காதவர்கள்

(6) நடைமுறை விவசாயத்திற்கு ஆகும் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் நிலத்தைச் சும்மா விட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள்

(7) ஒரே ஒரு  முறை செலவில் நீண்ட கால பயிரான  களை தவிர வேறு எந்தப் பிரச்சனைகளும் இல்லாத - உரம், பூச்சி மருந்துகள் எதுவும் தேவையில்லாத - எவ்வளவு வரட்சி வந்தாலும் வாடி அழிந்து விடுமே என்று வருத்தப்படத் தேவையில்லாத - ஒரு பயிர் - ஒரே ஒரு தாவரம் - சோற்றுக்கற்றாழையைத் தேர்வு செய்கிற விவசாயிகள்.

சோற்றுக்கற்றாழை விவசாய பயிற்சி

(8) சோற்றுக்கற்றாழை வளர்க்க நிலம் இருக்கிறது - வளர்ந்த பிறகு இதையே ஒரு மூலப் பொருளாக வைத்து ஒரு வியாபாரம் அல்லது ஒரு உற்பத்தித் தொழில் அல்லது இரண்டையும் செய்யலாமே என்கிற ஆர்வமும் தேவையும் (வசதியும் அனுபவமும் இரண்டாம் பட்சமே) இருப்பவர்கள்.

(9) முதலீடு செய்யப் பணம் இருக்கிறது - ஆனால் நிலம் இல்லை - எப்படி ஒப்பந்த விவசாயம் (Contract Farming) முறையில் சோற்றுக்கற்றாழை விவசாயத்தை / வணிகத்தை / தொழிலைத் தொடங்குவது என்று யோசிப்பவர்கள் (குறிப்பாக சோற்றுக்கற்றாழையை நேசிப்பவர்கள்.)

Must Read: பேரனுபவத்துடன் நிறைவடைந்த இயற்கை வேளாண்மை பயிற்சி

(10) இதற்கு முன்பு குறிப்பிட்டுள்ள எந்த வகையிலுமே என்னைச் சேர்க்கிற மாதிரி என்னிடம் எதுவுமே இல்லை - ஆனால் அலோவெரா அய்யா அவர்களின் சோற்றுக்கற்றாழை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதலை வைத்து - எனக்கான ஒரு வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற தேவையும் தேடலும் உள்ளவர்கள். 

தமிழும் - தேவையானால் அல்லது தவிர்க்க முடியாத சில நேரங்களில் மட்டும் ஆங்கிலமும் இந்தப் பயிற்சியின் பயிற்சி மொழியாக இருக்கும். அய்யாவின் சிறப்பு [Special] அலோவெரா ஜூஸ், அல்வா, ஆம்லட், சூப் இவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு செய்து காட்டப்படும்.குறிப்பெடுத்துக் கொள்ளத் தேவையான நோட்டு பேனா கண்டிப்பாகக்கொண்டு வர வேண்டும். 

தொலை தூரம் / வெளியூரிலிருந்து வருபவர்கள் காலை 9:30க்குப் பயிற்சி நடக்கும் இடத்தில் பதிவு செய்வதற்கேற்ப பயணம் மற்றும் தங்கும் வசதிகளை அவரவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். 

முக்கிய குறிப்பு: பயிற்சிக்கு வர விரும்புவர்கள் - முதலில் அய்யாவின் 9362138926 எண்ணுக்கு அழைத்து - தங்களைப் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். காரணம், அதிக பட்சமாக முப்பது பேர்களை மட்டுமே இந்தப் பயிற்சிக்காக எங்களால்  எடுத்துக் கொள்ள முடியும். எனவேதான் இந்த முப்பது பேர்களும்  இந்தப் பயிற்சியின் நோக்கத்திற்கும் தன்மைக்கும் ஏற்றவர்களாக  இருக்க வேண்டும்  என்று தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

முன்பதிவு மற்றும் பயிற்சி பற்றிய பிற தகவல் தொடர்புக்கு: அலோவெரா அய்யா  அவர்களை 93621 38926 என்ற மொபைல் எண்ணிலும், வழித்தடம், தங்கும் வசதி முதலிய தகவல்களுக்கு திரு.V.P.செல்லமுத்து அவர்களை 99940 55060 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 

#AgriEvents #OrganicTraining #NaturalLife #Aloeveratraining

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments