கேரள ஸ்டைல் முருங்கை கீரை முட்டை பொடிமாஸ்


கேரள  மாநில உணவுகள் எல்லாமே அந்த மாநிலத்தின் வேளாண் உற்பத்தி பொருளை அடிப்படையாக க் கொண்டவை. தேங்காய், தேங்காய் எண்ணைய் இல்லாமல் கேரளாவில் எந்த ஒரு உணவுப்பொருளையும் காணமுடியாது. 

முருங்கை கீரை முட்டை பொடி மாஸ் செய்முறையிலும் தேங்காய்க்கு முக்கிய இடம் உள்ளது. முருங்கை கீரை முட்டை பொடி மாஸில் முட்டை, முருங்கை கீரை இரண்டிலும் உள்ள சத்துகள் சேர்ந்து நமக்கு கிடைக்கின்றன. மேலும் இதை செய்வதும் எளிது. சில நிமிடங்களில் செய்து முடித்து விடலாம். 

முருங்கைகீரை பொடி மாஸ் செய்யும் விதம்

என்னென்ன பொருட்கள் தேவை?

முதலில் அரை கப் முருங்கை கீரையை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் இரண்டு முட்டையை தயாராக வைத்திருங்கள். துருவப்பட்டதேங்காய் நான்கு டீ ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டீ ஸ்பூன் பச்சை மிளகாய், அரை டீ ஸ்பூன் கடுகு., மூன்று சிறு பூண்டுகள், தேவையான உப்பு, தேங்காய் எண்ணைய் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும். 

தயாரிக்கும் விதம் 

முருங்கை இலைகள், தேங்காய் துருவல், மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றைப் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் எண்ணையை வாணலியில் போட்டு, கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்த உடன் பூண்டு பல்களை போட்டு வதக்கவும். பின்னர் முருங்கை கீரையை போட்டு வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்த உடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்; வாயுக்கோளாறு, ஜீரணக்கோளாறு விரட்டும் முருங்கை

தமிழ்நாட்டில் இதனை முட்டை பொடி மாஸ் என்று சொல்வார்கள். இதைத்தான் கேரளாவில் முருங்கை கீரை, தேங்காய் சேர்த்து முருங்கை கீரை முட்டை வறுவல் என்று சொல்கின்றனர். முட்டை பொடி மாஸ் ஒரு டேஸ்ட் என்றால் முருங்கை கீரை பொடி மாஸ் வேறு வகையான டேஸ்ட் ஆக இருக்கிறது. 

சூடான குழம்பு சாதத்ததுடன் தொட்டுக்கொள்ள முருங்கைகீரை பொடிமாஸ் அற்புதமாக இருக்கும். ரசம் சாதம் மட்டும் சாப்பிடும்போதும் முருங்கைகீரை முட்டை பொடிமாஸ் காம்பினேஷன் நன்றாக இருக்கும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். 

-பா.கனீஸ்வரி 

#MurungaiKeeraiEggPodiMass #KeralaStyleEggPodiMass  


Comments


View More

Leave a Comments