சென்னை புறநகரில் நடக்கும் இந்த 2 நிகழ்வுகளை மறக்காதீர்கள்


இயற்கை சந்தை திருவிழா 

பாரம்பர்ய மருத்துவ பயிற்சி 

இயற்கை வாழ்வியல் முகாம்கள்

 

சென்னை புறநகர் பகுதியில் வரும் டிசம்பர் மாதம் கீழ்கண்ட இரண்டு முக்கியமான பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிகள் பற்றித் தெரிந்து கொள்ள தகவலில் குறிப்பிட்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இந்த தகவல்கள் முழுக்க, முழுக்க சேவை அடிப்படையில் மட்டுமே வெளியிடப்படுகிறது. 

இயற்கை சந்தை திருவிழா

சென்னையில் இயற்கை சந்தை திருவிழா 10-12-2023 ஞாயிறு அன்று பேபி உயர் நிலைப்பள்ளியில் தாம்பரம் மேற்கு பகுதியில் நடைபெற உள்ளது.  தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் பின்புறம் , எம்ஆர் திரையரங்கு பின்புறம் - முத்துலிங்கம் வீதி‌ புது மார்க்கெட் பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்வை வள்ளுவம் இயற்கை சந்தை - நம்மாழ்வார் மக்கள் குழு ஓருங்கிணைக்கிறது. 

இந்த நிகழ்வில் இயற்கை மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் இயற்கை மருத்துவர் டாக்டர் அஜய் பிரகாஷ் இயற்கை வாழ்வியல் ~ உடல் நல பேனல் ~ உணவே மருந்து என ஆரோக்கியமான வாழ்வியலுக்கான மிகச் சிறந்த பயில் முகாமை நடத்துகிறார். இதற்கு கட்டணமாக :₹600 வசூலிக்கப்படுகிறது. நிகழ்வில் பங்கேற்க 7448558447, 9566667708  ஆகிய எண்களில் முன்பதிவு செய்யலாம். 

இயற்கை சந்தை

மேலும் வள்ளுவம் இயற்கை சந்தையில் தூய இயற்கை உணவுகள் காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள்  விற்பனை செய்யப்பட உள்ளன. 

Must Read: மரக்கன்றுகள் நட ஏற்ற மாதம் எது தெரியுமா?

குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் -  சமையல் மண்பாண்டங்கள் -  துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள் - பனை ஓலை பொருட்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் என இயற்கை சார்ந்த    பொருட்களின் சந்தையில் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களுமாக ஒருங்கிணைந்து பங்கேற்கின்றனர்.  நிகழ்வு நடைபெறும் இடத்தின் கூகுள் வழி வரைபடம்; https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA 

பாரம்பர்ய மருத்துவ பயிற்சி 

முகநூலில் பாரம்பர்ய மருத்துவபதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வரும் திரு.மரியபெல்சின் அவர்களிடம் பலர் தொடர்பு கொண்டு மருத்துவ குறிப்புகளை கேட்டறிந்து பலன் பெறுகின்றனர். 

அவர் அளிக்கும் குறிப்புகளின்படி சிலர் மிகச்சரியாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர். சிலர் ஒருநாள் நேரடி பயிற்சி வகுப்பு நடத்தினால் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வோம் என்று கேட்பதுண்டு. அதன்படி கடந்த காலங்களில் அவ்வப்போது சில பயிற்சிகளை மரிய பெல்சின் நடத்தியதுண்டு. 

பாரம்பர்ய மருத்துவ பயிற்சி

வரும் டிசம்பர் மாதம் 10-ம்தேதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள பாண்டூர் கிராமத்தில் அமைந்திருக்கும் அகணி உயிர் சூழல் நடுவத்தில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பயிற்சியை அகணி உயிர் சூழல் நடுவத்துடன் திரு.மரியபெல்சின் அவர்களின் செம்பருத்தி மூலிகை மருத்துவ இயக்கமும் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க  9551486617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். இயற்கைச் சூழலில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில் பங்கேற்று உடல் நலனை காத்துக்கொள்ளுங்கள். .

#Nammalvarpeopleforum  #AgriEvents #OrganicTraining #NaturalLife

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments