சென்னையில் ஜனவரி 7 மற்றும் 20 தேதி நடக்க உள்ள நிகழ்வுகளை மறவாதீர்


சென்னையில் ஜனவரி 7ம் தேதி பொங்கல் விழா 

20ம் தேதி பாரம்பர்ய மருத்துவ பயிற்சி 

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் குறித்தும், இயற்கை வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்வுகள் குறித்த முன்ன்றிவுப்பு செய்வதே இந்த பகுதியின் நோக்கம். அண்மையில் நடைபெற உள்ள இரண்டு நிகழ்வுகள் குறித்த தகவல்களை வழங்குகின்றோம்.

இயற்கை சந்தை பொங்கல் திருவிழா

வள்ளுவம் இயற்கை சந்தை நடத்தும் பொங்கல் திருவிழா  வரும் 07-01-2024 (ஞாயிறு)  அன்று,  சென்னை தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் பள்ளி வளாகத்தில்  நடைபெற உள்ளது. 

 கிராமத்து பொங்கல் குடிலில்  கொண்டாட்டமும் , மரபு விளையாட்டு போட்டியும் இயற்கையில் விளைந்த பொங்கல் பரிசுகளும்,  பானை உரியடி போட்டி, பல்லாங்குழி , கரும்பு சாப்பிடும் போட்டி. ஆகியவை நடைபெற உள்ளன. இவற்றில் அனைவரும் குடும்பத்தினரோடு பங்கேற்கலாம். 

வழக்கம் போல தூய இயற்கை உணவுகள், காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 

பொங்கல் விழா சந்தை

இது தவிர சமையல் மண்பாண்டங்கள் -  துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள் - பனை ஓலை பொருட்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் என இயற்கை சார்ந்த  பொருட்களையும் வாங்கலாம். நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களுமாக ஒருங்கிணைந்த ஆர்கானிக் விற்பனை சந்தையில் மக்களை சந்திக்க வள்ளுவம் இயற்கை சந்தைக் குழுவினர் தயாராக உள்ளனர். 

வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளி , ஜி.எஸ்.டி சாலை, தாம்பரம் மேற்கு ( பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில்) , சென்னை என்ற முகவரியில் சந்தை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு சந்தையின் ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிமாறன்.இரா  அவர்களை  9566667708 /  7448558447 ஆகிய ஏதேனும் ஒரு மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இயற்கை சந்தை பொங்கவிழாவில் பங்கேற்பதற்கான அனுமதி இலவசம். 

20ஆம் தேதி பாரம்பர்ய மருத்துவப் பயிற்சி 

2023-ம் ஆண்டு விடைபெற்று புதிய ஆண்டு (2024) பிறக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் நாம் புதிய சபதம் எடுப்போம். இந்த ஆண்டு எனக்கு நல்ல மாற்றத்தைத் தர வேண்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்வோம். நேர்மறை சிந்தனைகளுடன் எல்லோரும் நலம் பெற வேண்டுவோம். நிச்சயம் நல்லதே நடக்கும்.  ஆம்...நம்பிக்கைதான் வாழ்க்கை. 

பாரம்பர்ய மருத்துவ பயிற்சி முகாம்

பிறக்கவிருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். கூடவே இந்த நல்ல நாளில் எளிய மருத்துவம் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் பத்திரிகையாளரும், மூலிகை ஆர்வலருமான திரு.மரியபெல்சின் அவர்கள் மருத்துவ பயிற்சி ஒன்றை வரும் 20ம் தேதி நடத்துகிறார். மருத்துவப் பயிற்சி குறித்த விவரங்களுக்கு திரு.மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

நோய் வந்தவர்கள் மட்டுமல்ல, நம் அனைவருமே வருமுன் காத்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் பெருகிவரும் சூழலில் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த மருத்துவ பயிற்சி உதவும் 

#நம்மாழ்வார்_மக்கள்_குழு  #வள்ளுவம்_இயற்கை_சந்தை  #chennaievents #organicagriculture #agrievents #traditionalmedicine 

தோல் மற்றும் முடிக்கு 99% சுத்தமான கற்றாழை ஜெல்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments